Sunday, June 7
Shadow

“பழைய சூர்யாவை மீண்டும் பார்க்க ரெடி ஆகுங்க!” – குடும்ப ரசிகர்களை கவர வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

“பழைய சூர்யாவை மீண்டும் பார்க்க ரெடி ஆகுங்க!” – குடும்ப ரசிகர்களை கவர வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் என்ன தெரியுமா?
அவரை ஒரு முழுக்க முழுக்க குடும்ப பின்னணியிலான, மனசை தொட்டுப் போகும் கதையில் பார்க்க வேண்டும் என்பதுதான். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போகும் படமாக தற்போது பேசப்பட்டு வருகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. சுதந்திர தின விடுமுறை என்பதால் குடும்பங்களாக திரையரங்குகளுக்கு வர ரசிகர்கள் ஏற்கனவே திட்டமிட்டு வருகிறார்கள்.

படத்தின் டீசர், டைட்டில் அறிவிப்பு வந்த தருணத்திலிருந்தே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக, ஒரு குழந்தையுடன் சூர்யா இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வேற லெவல் கனெக்ட் ஆனது. “இதுதான் நம்ம பழைய சூர்யா!” என்ற கமெண்ட்ஸ்களே அதிகம்.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இந்த முறை குடும்ப உறவுகள், அப்பா-மகன் பாசம், உணர்ச்சி, நகைச்சுவை என எல்லாம் கலந்த ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை தரப்போகிறார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. உணர்ச்சிப் பகுதிகளில் அவரது இசை பெரிய பலமாக இருக்கும் என பேசப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த படத்தை திங்க் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. அதனால் மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான திரையரங்கு வெளியீடு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 14 முதல் திரையரங்குகளில் குடும்பத்துடன் கொண்டாட தயாராக இருக்கும் படம் – ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

தொழில்நுட்ப குழு:

– எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
– தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா
– இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
– ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
– படத்தொகுப்பு : நவீன் நூலி
– தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்
– நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
– சண்டை பயிற்சி : V. வெங்கட்
– தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
– வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

“Get Ready To Witness Vintage Suriya Again!” – ‘Vishwanath & Sons’ Arrives As A Complete Family Celebration

One thing Suriya fans have been waiting for over the years is to see him once again in a heartwarming family entertainer filled with emotions, relationships and memorable moments. That expectation now seems set to come true with ‘Vishwanath & Sons’.

Directed by Venky Atluri, the film is gearing up for a grand worldwide theatrical release on August 14th. With the Independence Day holiday weekend around the corner, family audiences are already looking forward to celebrating the film together in theatres.

From the moment the teaser and title announcement were released, the film instantly grabbed attention across social media. More importantly, the first-look posters featuring Suriya alongside a child created an emotional connection with audiences and reminded fans of the actor’s vintage charm. Many fans have already started calling it “the return of the old Suriya.”

After delivering successful films like Vaathi and Lucky Baskhar, director Venky Atluri is now expected to present a feel-good entertainer packed with strong family emotions, father-son bonding, humour and touching moments that can connect with audiences of all age groups.

The film features Mamitha Baiju, Radhika Sarathkumar and Raveena Tandon in important roles. Music composed by G.V. Prakash Kumar has further increased the expectations surrounding the project, with fans believing his soundtrack will become one of the film’s biggest emotional strengths.

In Tamil Nadu, the film will be distributed by Think Studios, ensuring a wide theatrical release across the state.

Starting August 14th, ‘Vishwanath & Sons’ looks all set to become a perfect theatrical celebration for families and Suriya fans alike.

Technical Crew:

– Written & Directed by: Venky Atluri
– Producers: Suryadevara Naga Vamsi & Sai Soujanya
– Music: G.V. Prakash Kumar
– Cinematography: Nimish Ravi
– Editing: Navin Nooli
– Production Designer: Banglan
– Executive Producer: Yalamanchili Gopala Krishna (Nani)
– Fight Master: V. Venkat
– Production Houses: Sithara Entertainments & Fortune Four Cinemas
– Presenter: Srikara Studios