Saturday, June 27
Shadow

இயக்குனர் ரஞ்சித் விஷயத்தில் அறம் இயக்குனரின் அந்தர் பல்டி

‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இதற்கு முன் ரஞ்சித் இயக்கிய‘மெட்ராஸ், முருகதாஸ் இயக்கியகத்தி’ படங்களின் கதை தன்னுடையது என்றுகடும் சர்ச்சையைஏற்படுத்தியவர்.

அப்போது கோபி நயினார் கூறிய தகவல்கள், அவர்ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் நேர்மையான பத்திரிகையாளர்கள் அவர் தரப்புஅறிக்கைகள், பேட்டிகள் என பலவற்றை அப்படியே அப்போது வெளியிட்டனர்.

மெட்ராஸ், கத்திகதை விவகாரசர்ச்சையிலஅப்போது்திரை மறைவில் பல வேலைகள் நடந்ததாக கூறப்பட்டது. மெட்ராஸ் கதை பஞ்சாயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிவன்னியரசும், கத்தி பட விவகாரத்தில் இயக்குனர்சீமான் ஆகியோர் தலையிட்டு கோபியை கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டது.அதன் பின் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது, அடக்கப்பட்டது.

கோபி நயினார் இயக்கிய ‘அறம்’ படம் கடந்த வாரம் வெளிவந்த பின் பாரபட்சமின்றி படத்தைப் பாரட்டியதோடு இல்லாமல், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக மீண்டும் ‘மெட்ராஸ், கத்தி’ சர்ச்சைகளை எழுப்பி, அந்தக் கதைகள் கோபி நயினார் கதைதான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அறம் ரீலீஸ் ஆன நாள் முதல் நடந்த இந்த விவாதத்தில்முருகதாஸ் தரப்பினர் மூக்கை நுழைக்காமல் மெளனம் காத்தனர்.

. ஆனால், மெட்ராஸ் இயக்குனர்பா.ரஞ்சித் நலம் விரும்பி கள்பலரும் ‘மெட்ராஸ்’ கதை திருட்டுக் கதை அல்ல, அது ரஞ்சித் எழுதிய கதை என எதிர்வ் வாதம் செய்து பதிவிட்டு வந்தார்கள்.

கோபி நயினார் தரப்பில் அவரது ஆதரவாளர்கள் இதற்கு முன் நடந்த கோபி நயினார் கதைத் திருட்டு பற்றி பதிவுகளைப் அதிவேகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவந்தார்கள். இது பற்றி ரஞ்சித், கோபிநயினார் இருவரும் நேரடியாக கருத்து சொல்லாமல் மௌன சாமியார்களாக இருந்தனர்.

தொடரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோபி நயினார் பதிவு என ஒன்றை பா.ரஞ்சித் தரப்பிலிருந்து சிலர் வெளியிட்டுள்ளார்கள்.

அதில் கூறியிருப்பதாவது,

“இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்.
ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான
சூழலல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில்
குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும்
ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும்.

ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான்
அனுமதிக்க மாட்டேன்.

நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தததை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைதெரிவித்து கொள்கிறேன்.
தோழமையுடன் கோபி நயினார்.என அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

கோபி நயினாரின் இந்த அறிக்கை மீண்டும் ஒரு விவாதத்தைஇப்போது கிளப்பியுள்ளது. அவர் மனமுவந்து இந்த அறிக்கையைக் கொடுத்துள்ளாரா அல்லது சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கொடுத்துள்ளாரா என்பது கோபி நயினாருக்குத்தான் வெளிச்சம்.

முதல் படத்திலேயேஒரு தரமான இயக்குனராக ‘அறம்’ படம் மூலம் தன்னை நிருபித்துள்ள கோபி நயினார் அவரே ‘கத்தி, மெட்ராஸ்’ இரண்டு படங்களின் கதைகள என்னுடையது இல்லை.அவை திருடப்படவில்லை என சொன்னால் மட்டுமே இந்த ‘திருட்டுக் கதை’ விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வரும்.

அதுவரை கோபி நயினார் நிறுத்திக் கொண்டாலும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் தொடரும். அறம் பேசிய கோபிநயினார் சொல்கிற எதுவும் அறம் சார்ந்து இருக்குமா என்று ஊடகங்கள் சந்தேக கண்கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது.

Leave a Reply