
மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்; நான்கு திரைப்படங்கள்! – பொழுதுபோக்குத் துறையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் டிஜிட்டல் படைப்புகள்; திரைப்படத் தயாரிப்பு மற்றும் பிராண்டுகளுக்கான புதிய கன்டென்ட் முயற்சிகளிலும் கவனம்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் OTT சீரிஸ்களைத் தயாரிப்பதுடன், நான்கு திரைப்படங்களையும் உருவாக்கும் திட்டத்துடன் ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 20, 2026 அன்று தனது புதிய தயாரிப்புத் திட்டங்களை அறிவித்துள்ள இந்நிறுவனம், திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள் மற்றும் பிராண்டுகளுக்கான பிரத்யேக கன்டென்ட் தயாரிப்பு எனப் பல்வேறு தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஹன்சா என்டர்டெயின்மென்ட், குறுகிய காலத்திலேயே தனது தயாரிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. முக்கிய OTT தளங்களுடன் இணைந்து நீண்ட தொடர்கள் மற்றும் குறுந்தொடர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தனது முதல் கட்டப் படைப்புகளின் தயாரிப்புப் பணிகளை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடங்க உள்ளது.
ஒரே நேரத்தில் பல்வேறு படைப்புகளை உருவாக்கும் வகையில் குழுவை விரிவுபடுத்தியுள்ள ஹன்சா என்டர்டெயின்மென்ட், கதைகளின் தரம், தயாரிப்புத் திட்டமிடல் மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில்தான் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் இருக்கிறது. புதுமையான கதைகள், பல்வேறு ஜானர்கள் மற்றும் திறமையான படைப்பாளிகளுடனான கூட்டணிகள் மூலம் நீடித்த வளர்ச்சியைக் கொண்ட கன்டென்ட் நிறுவனத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம். மொழி மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்து பல்வேறு தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் கதைகளை உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.
நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான சித்தார்த் சுவாமி கூறுகையில், “நிறுவனம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பெரிய அளவிலான தொடர்களைத் தயாரிக்கும் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். ஹன்சா விஷன் நிறுவனம் பல ஆண்டுகளாக உருவாக்கிய நற்பெயரும், திரைத்துறையில் எங்களுக்கு இருக்கும் உறவுகளும் இந்த வளர்ச்சிக்குப் பக்கபலமாக உள்ளன. ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான திறனை வளர்த்துள்ளதுடன், ஒவ்வொரு படைப்பிலும் தரத்தைப் பேணுவதையும் திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்வதையும் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்” என்றார்.

நான்கு திரைப்படங்கள் – மூன்று தமிழ்ப் படங்கள், ஒரு மலையாளப் படம்!
OTT தயாரிப்புகளுடன் மட்டும் நின்றுவிடாமல், திரைப்படத் தயாரிப்பிலும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. நிறுவனத்தின் CEO சுஜாதா நாராயணன் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் கட்டமாக நான்கு திரைப்படக் கதைகள் தயாராகியுள்ளன. இதில் ஒரு மலையாளப் படமும் மூன்று தமிழ்ப் படங்களும் இடம்பெற்றுள்ளன.
வெவ்வேறு கதைக்களங்களையும் தனித்துவமான அணுகுமுறைகளையும் கொண்டுள்ள இந்தப் படங்கள், உள்ளூர் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பல மொழிகளைச் சேர்ந்த ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட உள்ளன. மேலும், இக்கதைகளைப் பிற மொழிகளிலும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களை அணுகியபோது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அடுத்தகட்டத் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு படங்களில் இரண்டு படங்களுக்கான முன்தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 2026 முதல் தொடங்கவுள்ளன.
ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் நான்கு திரைப்படங்கள்:
1. மலையாளம் – இளமை மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட டிராமா
இளம் வயதினரின் வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை இந்து வி.எஸ். எழுதி இயக்குகிறார்.
இயக்குநர் விவரம்: https://www.imdb.com/name/nm12034310
2. தமிழ் – இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்
விசாரணையை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் கதையை சர்ஜுன் கே.எம். மற்றும் ஸ்ரீஹரி ஜெகநாதன் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தை சர்ஜுன் கே.எம். இயக்குகிறார்.
இயக்குநர் விவரம்: https://www.imdb.com/name/nm9543933
3. தமிழ் – ஸ்போர்ட்ஸ் டிராமா
விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை அருண்பிரகாஷ் எழுதி இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும்.
4. தமிழ் – இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்ட காமெடி டிராமா
இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்குகிறார்.
இயக்குநர் விவரம்: https://www.imdb.com/name/nm14930400/
இந்த நான்கு திரைப்படங்களின் மூலம் வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்குவதுடன், திறமையான எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து புதிய படைப்புகளை வழங்க ஹன்சா என்டர்டெயின்மென்ட் திட்டமிட்டுள்ளது.
பிராண்டுகளுக்கான கன்டென்ட் தயாரிப்பிலும் புதிய முயற்சிகள்!
திரைப்படங்கள் மற்றும் OTT சீரிஸ்கள் மட்டுமின்றி, விளம்பரத் துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஹன்சா என்டர்டெயின்மென்ட் செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் விளம்பரங்கள், பிராண்ட் ஃபிலிம்கள் மற்றும் மொபைல் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட வெர்ட்டிக்கல் டிராமாக்கள் எனப் பல்வேறு வடிவங்களில் கன்டென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
மாறிவரும் டிஜிட்டல் பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்ப, பிராண்டுகள் தங்களது கதைகளையும் தயாரிப்புகளையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய படைப்புகளை உருவாக்குவதிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
வலுவான பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுக்க இலக்கு!
R K SWAMY HANSA குழுமத்தின் தலைவர் சீனிவாசன் சுவாமியின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடன் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இதுகுறித்து சீனிவாசன் சுவாமி கூறுகையில், “ஹன்சா என்டர்டெயின்மென்ட் குழுவினரின் ஆர்வமும் உற்சாகமும் மகிழ்ச்சியளிக்கின்றன. இந்த அணுகுமுறை OTT தளங்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க உதவும். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இன்னும் சில ஆண்டுகளில் பொழுதுபோக்குத் துறையில் வலுவான நிறுவனமாக ஹன்சா என்டர்டெயின்மென்ட் உருவெடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகளுக்கான கன்டென்ட் தயாரிப்பு எனப் பல்வேறு தளங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் ஹன்சா என்டர்டெயின்மென்ட், படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து தரமான படைப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள், நான்கு திரைப்படத் திட்டங்கள் மற்றும் புதிய தலைமுறைக்கான விளம்பரக் கன்டென்ட் முயற்சிகள் எனப் பல்வேறு திசைகளில் விரிவடைந்து வரும் இந்நிறுவனம், இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Hansa Entertainment Expands Its Creative Horizons with Multi-Language OTT Series and Four Feature Films
The production house plans to create OTT series in Tamil, Telugu and Malayalam, while expanding into feature films and next-generation brand content solutions.
Chennai, India, October 22, 2026: Hansa Entertainment is expanding its presence in the Indian entertainment industry with an ambitious slate of digital series, feature films and innovative brand content. Announced on the auspicious occasion of Vijayadashami on October 20, 2026, the company has outlined its plans to develop long-form and short-form series across Tamil, Telugu and Malayalam, alongside a diverse lineup of feature films.
Established in April 2026, Hansa Entertainment has expanded its operations within a short period and is preparing to collaborate with major OTT platforms across the three language markets. The company plans to commence production on its maiden long-running series projects in Tamil, Malayalam and Telugu during October and November 2026.
With a growing team and the capacity to manage multiple productions simultaneously, the company aims to deliver engaging stories while maintaining high standards of quality, consistency and timely execution.
Commenting on the company’s vision, Sruti Swamy, Director of Hansa Entertainment, said, “We believe the future of entertainment lies in combining a strong creative vision with a deep understanding of audiences and the evolving possibilities of technology. Our long-term vision is to build a sustainable content business rooted in original intellectual properties, diverse genres and strong creative partnerships. By developing stories that transcend linguistic and cultural boundaries, we are confident of making a meaningful difference in this space.”
Siddharth Swamy, Director of Hansa Entertainment, added, “Within just a few months of commencing operations, we have established a strong presence in large-scale, long-format production, building on the goodwill and industry relationships cultivated by Hansa Vision. We have rapidly expanded our team and strengthened our capabilities to meet the evolving demands of our platform partners. Our immediate priority is to execute multiple productions simultaneously while maintaining high standards of quality, consistency and timely delivery.”
Four Feature Films Across Tamil and Malayalam
Beyond digital series, Hansa Entertainment is making a significant move into feature film production, with four distinct projects forming its initial film slate. The lineup comprises one Malayalam film and three Tamil films, with the potential for these stories to reach audiences across multiple regions and languages.
According to Sujatha Narayanan, CEO of Hansa Entertainment, the projects are being developed to combine compelling, culturally rooted narratives with broad commercial appeal. The company has approached its preferred choices of actors and stars, with the initial response described as encouraging.
Pre-production for two of the four films is scheduled to begin in December 2026.
The company’s first four feature film projects are:
1. Malayalam Feature Film – Young Adult and Relationship Drama
Written and directed by Indhu V.S., the film explores the lives and relationships of young adults.
Director profile: https://www.imdb.com/name/nm12034310
2. Tamil Feature Film – Investigative Thriller
The investigative thriller features a story written by Sarjun K.M. and Srihari Jagannathan, with Sarjun K.M. directing the film.
Director profile: https://www.imdb.com/name/nm9543933
3. Tamil Feature Film – Sports Drama
Written and directed by ArunPrakash, the sports drama marks his feature film directorial debut.
4. Tamil Feature Film – Gen-Z Comedy Drama
Written and directed by Vikram Shreedharan, the comedy drama centres on the lives and experiences of today’s younger generation.
Director profile: https://www.imdb.com/name/nm14930400/
Through this diverse lineup, Hansa Entertainment aims to work with talented writers and directors to bring distinctive stories to the screen, exploring different genres and storytelling styles.
Sujatha Narayanan highlighted the company’s commitment to collaborating with creative talent, noting that the writers and directors were drawn to Hansa Entertainment’s proactive approach to storytelling and its interest in developing differentiated narratives.
Expanding into Next-Generation Brand Content
In addition to films and digital series, Hansa Entertainment is strengthening its presence in commercial content production. The company is developing a range of solutions for brands, including television commercials (TVCs), AI-driven advertisements, brand films and vertical dramas designed specifically for mobile-first audiences.
By exploring emerging technologies and new storytelling formats, the company aims to help brands connect with audiences through engaging and innovative content.
Building a Strong Presence in the Entertainment Industry
Hansa Entertainment operates under the guidance and mentorship of Srinivasan Swamy, Chairman of the R K SWAMY HANSA Group. The company aims to bring together creative talent, technology and audience engagement across multiple entertainment formats.
Commenting on the team’s progress, Srinivasan Swamy said, “I am happy with the enthusiasm and energy of the team at Hansa Entertainment. This will help them build strong relationships with platform partners, scriptwriters, major technicians and actors involved in production. Given this, I am confident that they will emerge as a powerhouse in the entertainment industry in just a few years.”
With plans spanning multilingual OTT series, four feature film projects and innovative commercial content solutions, Hansa Entertainment is positioning itself for growth across India’s evolving media and entertainment landscape.
About Hansa Entertainment
Hansa Entertainment is a content production house dedicated to creating engaging narratives across feature films, digital series, television and advanced brand content solutions. Backed by industry experience and creative expertise, the company focuses on producing high-quality entertainment and innovative media solutions for diverse audiences.
