Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் வீட்டில் ஓவியா எப்படி பட்டவர் அவர் என்ன செய்தார் மனம் திறக்கும் ரைசா

பொதுவாக ஓவியாவை எல்லோருக்கும் பிடிப்பதற்கான காரணம் அவர் கலகலப்பானவர் என்று தான் நினைத்தோம் ஆனால் ஓவியாவை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருந்த ரைசா என்ன சொல்ல்கிறார் தெரியுமா.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பலரும் தற்போது தான் மெல்ல தலைக்காட்ட ஆரம்பித்துள்ளனர். பல பத்திரிகைகள் அவர்களை தொடர்புக்கொண்டு பேட்டிகள் எடுத்து வருகின்றது.

இதில் ரைஸா ஒரு ஊடகத்தில் பேசும் போது ‘நான் பிக்பாஸில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன், ஏனெனில் அவரிடம் நிறைய தமிழ் உணர்வு இருந்தது.

அதை வைத்து அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தேன், மேலும், அந்த வீட்டில் யாருடனுமே எனக்கு பிரச்சனை இல்லை.

எனக்கு மட்டுமில்லை எங்கள் யாருக்குமிடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, தமிழ் பேச மிகவும் சிரமப்பட்டேன், கமல் சார் பேசும் தமிழ் புரியவே இல்லை’ என பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மேலும் உங்கள் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் குணத்திற்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்று கூறிய போது , ஓவியாவை போரிங் என்றும் அவர் கூறியுள்ளார்(அதாவது ஓவியா கலகலப்பானவர் அதற்கு எதிர்மறையாக போரிங் என்று குறிப்பிட்டார் விளையாட்டாக). சமூக வலைத்தளங்களில் தற்போது எங்கு திரும்பினாலும் இவர்களுடையே பேட்டி தான்.

Leave a Reply