நடிகர் விமான நிலைய ரஜினி சுருக்கமான பேட்டி
?5 நாள் படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறேன்.
?செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.
?நண்பர்களுடன் அரசியல் குறித்து நான் பேசியதை மறுக்கவில்லை.
?அரசியலுக்கு வருவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
?அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது தெரிவிப்பேன்
?நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.
?சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார். முழுமையாக பார்ப்போம்
அரசியலில் இறங்குவாரா? மாட்டாரா? என்று ஊடகத்தினர் ஆரூடம் சொல்லி வரும் நிலையில் ரஜினிகாந்த் தன் ‘காலா’ பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். முதல் ஷெட்யூலில் 2 வாரங்கள் கலந்து கொண்டு நடித்தார் ரஜினி. அப்போது கருப்பு வேட்டி-ஜிப்பா அணிந்து தாதாவாக தமிழர் பகுதியான தாராவியில் வலம் வருவது, நலிந்த மக்களிடம் குறைகள் கேட்பது, தமிழர்களுடன் ஆடிப்பாடுவது, வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
அத்துடன் மோட்டார் சைக்கிள் பின்னால் ரஜினி உட்கார்ந்து செல்லும் காட்சிகளையும் இயக்குனர் ரஞ்சித் குறுகலான தெருக்களில் கேமராவுடன் சென்று படம் பிடித்தார்.
முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னை திரும்பிய நிலையில் மற்ற நடிகர்கள் மும்பையிலேயே முகாமிட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வந்தனர். இதனிடையே இன்று இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகாக மும்பைக்கு சென்றார் ரஜினிகாந்த். அப்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, “அடுத்த கட்டமாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன். அரசியலுக்கு வருவது என முடிவெடுத்தவுடன், நீங்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவெடுக்கும் போது அறிவிப்பேன். என்னை சந்திக்கும் நண்பர்களோடு அரசியல் குறித்து பேசியதை மறுக்கவில்லை” என்று பேசினார் ரஜினி.
தற்போது ரஜினிகாந்துடன் கதாநாயகியாக வரும் ஹூமா குரேஷி இணைந்து நடிக்கும் காட்சிகளும் படமாகிறது என்றும் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, மும்பையிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்ல திட்டமிட்டுள்ளார் ரஜினி என்றும் போயஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது