
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தனி ஒருவன் படத்தில் முதன் முறையாக அதிரடி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரோமியோ ஜூலியட் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் போகன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயம் ரவி. இதிலும் ஹீரோவுக்கு சமமான மற்றொரு கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரவிந்த்சாமி தயக்கம் காட்டினார்.
இது பற்றி ஜெயம் ரவி கூறும்போது, ‘போகன் படத்தில் நடிப்பதற்காக அரவிந்த்சாமியை நான் அணுகியபோது என்னிடம் மனம்விட்டு பேசினார். இப்போதுதான் இருவரும் இணைந்து நடித்த தனிஒருவன் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்குள் மீண்டும் நாம் இருவரும் சேர்ந்து நடிப்பது சரியாக வருமா என யோசி என்றார்.
கதையை கேளுங்கள் அதன்பிறகு முடிவு செய்யுங்கள் என்றேன். இயக்குனரிடம் கதை கேட்டார். அடுத்த நொடியே இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டார். ரோமியோ ஜூலியட் படத்துக்கு பிறகு எனது திரையுலக வாழ்க்கையில் போகன் மிகப் பெரிய மைல்கல்லாக அமையும் என முழுவதுமாக நம்புகிறேன். பிரபுதேவா, டாக்டர் கே.கணேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.’ என்றார். இந்த மாதம் 23ம் தேதி ரிலீஸ் என்று இருந்த படம் ரிலீஸ் சூர்யாவின் S3 படத்தால் தள்ளிபோகுமோ என்று ஒரு சந்தேகம் கிளம்பியுள்ளது .