Saturday, June 27
Shadow

கதைகேட்காமலே ரஜினி படத்தின் ஏன் நடிக்க சம்மதித்தேன் விஜய் சேதுபதி விளக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் கதையைக் கேட்காமலே ஓகே சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து ஜுன் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ரஜினியுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஜூன் மாதம் டார்ஜிலிங்கில் படப்பிடிப்பு தொடங்க, முதற்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இந்நிலையில், விஜய்சேதுபதி இப்படத்தின் கதையைக் கேட்காமலே ஒப்பந்தமானதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வாய்ப்பைக் கொடுத்தது கார்த்திக் சுப்பராஜ். எனக்கு இன்னும் கதையே தெரியாது. கார்த்திக் சுப்பராஜ் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது.

திரைத்துறையில் இப்படி 10 இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு போய் நடித்துவிடுவேன். ஏனென்றால் அவர்களுடைய சினிமா மொழி மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதில் கார்த்திக் சுப்பராஜ் மிக முக்கியமானவர்.

ரஜினி சாருடைய ஸ்கிரீன் ப்ரசன்ஸ் ஒன்று இருக்கிறது. மேலும், எனக்கு இதுவொரு பெரிய அனுபவம். ரஜினி சாரை ஸ்கிரீனில் பார்ப்பதற்கும், நேரில் எவ்வளவு வேலை செய்கிறார் என்பதை நேரில் பார்த்து ரசிப்பதற்காகவும் ஒப்புக்கொண்டேன்.