குருகியாகாலத்திலே தான்வி ஒரு சிறந்த நடிகன் என்று தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் என்றால் அது விஜய் சேதுபதி யார் பக்கபலமும் இல்லாமல் தன் திறமை வசன உச்சரிப்பு யதார்த்த நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதி சேர் போட்டு அமர்ந்துவிட்டார். என்று தான் சொல்லணும். அது மட்டும் இல்லாமல் தான் கஷ்டப்படும்போது தனக்கு உதவியவர்களை தேடி உதவி செய்பவர். விஜய்சேதுபதியின் நேர்மைக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
இவருடைய எதார்த்தமான நடிப்பு ஒவ்வொருவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டது கிடையாது.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய் சேதுபதியை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று வெளியானது.
அதாவது, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், அந்த படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்ததாக செய்தி வெளிவந்தது.
இதற்காக, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ‘இந்த செய்தி உண்மையல்ல… மன்னிக்கவும்’ என்று விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒரு பைசாகூட செலவழிக்காமல் வீண் விளம்பரங்கள் தேடிக்கொள்ளும் சில நடிகர்கள் மத்தியில், விஜய் சேதுபதியின் நேர்மையான குணம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது