Tuesday, September 10
Shadow

“தல 57” ஐரோப்பியா படபிடிப்பு முடிந்ததும் அமெரிக்கா செல்கிறது படக்குழு

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை இதன் படபிடிப்பு சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன்இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பியா வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதன்பின் இந்தியா திரும்பும் படக்குழு, மீண்டும் வந்த சில நாட்கள்அ ஓய்வுக்கு பிறகு உடனே அமெரிக்கா சென்று படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இந்த வேகத்தில் சென்றால் தான் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று பட குழுவினர் முடிவு எடுத்துள்ளனர். இது வரை யாரும் பார்க்காத வித்தியாசமான ஸ்டைலில் பார்க்கலாம் அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைக்களம் ஹாலிவுட் படத்துக்கு நிகராக இருக்கு வேண்டும் என்று இந்த படத்துக்காக இயக்குனர் சிவா பணிபுரிகிறார் .

Leave a Reply