
பொதுவாக தமிழ் சினிமாவில் அஜித் என்றால் எல்லோருக்கும் மரியாதை அதற்க்கு காரணம் அவர் மற்றவர்களின் மீது காண்பிக்கும் அன்பு தான் எல்லோர் மீதும் அவர் எடுத்து கொள்ளும் அக்கறை குறிப்பாக லைட் மேன் காபி கொடுப்பவர் வரை எல்லோருக்கும் மரியாதை செய்பவர் படபிடிப்புக்கு வந்தவுடன் எல்லோருடன் சென்று வணக்கம் சொல்லுவார் அதே போல படபிடிப்பு முடிந்தவுடன் எல்லோருக்கும் நன்றி சொல்லவிட்டு தான் போவார் .
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதுவரை தான் நடித்துவந்த எல்லா படங்களின் ஷூட்டிங்கிலும் ஓவராக பந்தா காட்டும் காஜல் அகர்வால், ‘தல 57’ படப்பிடிப்பில் மட்டும் ரொம்பவே அடக்கி வாசித்தாராம். எப்போதும் கேரவனுக்குள் அமர்ந்துகொண்டு லேட்டாக ஸ்பாட்டுக்கு வரும் அவர், ‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் கேரவனுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருந்தாராம். இதற்கெல்லாம் அஜித் மீது அவர் வைத்துள்ள மரியாதைதான் காரணம் என சொல்லப்படுகிறது.
