
சமீபத்தில்ர தமிழ்ஜி சினிமாவை உலுக்கிய பாடல் என்றால் ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது நாம் அறிந்ததே.
அருண்ராஜா காமராஜ் எழுதி பாடிய இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் இதுபோன்ற ஒரு பாடலை ‘விஜய் 60’ படத்தில் இடம் பெற செய்யுமாறு சந்தோஷ் நாராயணனிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதற்காக சில நாட்கள் முன் அருண்ராஜா காமராஜ் யும் சந்தித்துள்ளார்.
பரதன் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது சந்தோஸ் நாராயணன் தான் தற்போது பிஸி இசையமைப்பாளர் விஜய்யின் அன்பு கட்டளைக்கு எப்படியான பாடல்கள் கொடுக்கபோகிறார் என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும்.