
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோகளில் படு பிஸியாக இருப்பது என்றால அது தனுஷ் என்று தான் சொல்லணும் காற்று உள்ள போதே தூற்றி கொள் என்ற பழமொழியை பின்பற்றுபவர் என்று தான் சொல்லணும் வாய்ப்பு இருக்கும்போதே அதை சிறப்பக செயல் படுத்தவேண்டும் என்று ஓய்வு இல்லாமல் உழைப்பவர் கைவசம் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் ஒரு படம் இயக்கம் என்று படு பிஸி
நடிகர் தனுஷ் தற்போது வி ஐ பி 2 படத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே ட்விட்டரில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர், தனது படங்களை பற்றியும் சக ஹீரோக்கு வாழ்த்து சொல்வதை போன்ற பல நல்ல விஷயங்களை ட்விட்டரின் மூலம் தெரிவிப்பார்.
இந்நிலையில் இன்று வி ஐ பி2 படப்பிடிப்பை முடித்து கொண்டு விடும் திரும்பும் போது இந்த நாள் படப்பிடிப்பு தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்த நாள் என்றும் இதை விட வேறு என்ன சந்தோசபடுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இந்த புகழ்ச்சி எதை குறிப்பது என்று தெரியவில்லை மனைவி சரியாக படம் பண்ணவில்லை என்று சொல்லவருகிறார இல்லை இதுவரை பண்ண இயக்குனர்களில் மச்சினிச்சி இயக்கம் தான் சூப்பர் என்று சொல்ல வருகிறா என்று புரியவில்லை
