Wednesday, October 28
Shadow

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்” – டுவிட்டர் பதிவில் கமல்ஹாசன் கருத்து

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்த தம்பி என்றும், தனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி எனவும், அரசியலுக்கு அவர் வந்தால் கண்டிப்பாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.