Sunday, June 28
Shadow

விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடி ஆகிடும் சொன்னது யார் தெரியுமா ?

விஜய் சினிமா வளர்சிக்கு மட்டு இல்லை எல்லா விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொன்னால் அது மிகையாகது அந்த அளவுக்கு விஜய்யின் உயர்வுக்கு பக்க பலாக இருந்து இருக்கிறார் அதோடு விஜய் கட்சி ஆரம்பிக்க முதல் அடி வைத்தவரும் இவர் தான் இந்த சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி இவரே இப்ப என்ன சொல்லி இருக்குறார் தெரியுமா

ரஜினியும் கமலும் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

அஜித் எப்போதும் அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. ஆனால் விஜய் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். படங்களில் அவர் பேசும் வசனங்களிலேயே அது புரியும்.

சமீபத்தில் காவிரிக்காக நடந்த நடிகர்கள் போராட்டத்திலும் விஜய் முதல் ஆளாக வந்து கலந்துகொண்டார்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசியுள்ள விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி, “விஜய் இப்போது அரசியலுக்கு வந்தால் ஜோக் ஆகிவிடும்” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“இப்போது தான் சீனியர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளனர். இப்போது விஜய் அரசியலுக்கு வந்தால் ஜோக் ஆகிவிடும். அவர் அரசியலில் குதிக்கவேண்டும் என நான் நினைத்தேன், ஆனால் அதற்கு இது சரியான நேரமல்ல. விஜய் எந்த ஒரு முடிவையும் தெளிவாக யோசித்து எடுக்க கூடியவர். அவர் என்ன முடிவெடுப்பார் என்பது எனக்கு தெரியாது” என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.