Tuesday, February 11
Shadow

க் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், நடிகர் யோகேஷ், நடிகை அனிகா நடிப்பில் வெளியாகியுள்ள க் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.

கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
நடிகர்கள் யோகேஷ், அனிகா, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்:
படத்தின் வசனங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்

மொத்தத்தில் க் அனைவரும் ஒரு முறை பார்த்து பாராட்ட வேண்டிய படம்.