“ரசிகர்களுக்காக இதுவரை பார்க்காத சூர்யாவை வெளிப்படுத்துகிறேன்!” – துபாயில் மனம் திறந்த நடிகர் சூர்யா!
“ரசிகர்களுக்காக இதுவரை பார்க்காத சூர்யாவை வெளிப்படுத்துகிறேன்!” – துபாயில் மனம் திறந்த நடிகர் சூர்யா!
ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு – கிரைம் த்ரில்லர், மர்டர் மிஸ்டரி, குடும்பப் பொழுதுபோக்கு எனப் பல பரிமாணங்களில் உருவாகியுள்ள புதிய முயற்சி!
துபாய்: நடிகர் சூர்யா நடிப்பில், மலையாளத் திரையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பிரத்யேக விளம்பர நிகழ்வு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில், படத்தின் சிறப்பம்சங்கள், தனது கதாபாத்திரம், ரசிகர்கள் மீதான அன்பு மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் சூர்யா.
2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோ...
