Sunday, April 19
Shadow

இமைக்கா நொடிகள் – திரைவிமர்சனம் (வெற்றி பாதை) Rank 4/5

டிமாண்டி காலனி என்ற வெற்றி படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் வந்து இருக்கும் மிக பெரிய வெற்றி படைப்பு தான் இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வித்தியாசமான திரில்லர் படம் டிமாண்டி காலனி படம் மூலம் வித்தியாசமான திரைகதை மற்றும் மேக்கிங் கொடுத்த அஜய் இந்த படம் மூலம் மேலும் நிருபித்துள்ளார் . படம் ஒவ்வொரு காட்சிகளும் சீட்டின் நுனிக்கு நம்மை வரவைக்கும் அளவுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கு மேலும் மிக பெரிய வெற்றி என்றால் மிகையாகது அந்த அளவுக்கு மிக சிறப்பான படம் நயன்தாரா படம் என்றால் கண்ணை மூடி கொண்டு திரை அரங்கு போகலாம் என்ற உத்திரவாதத்தை கொடுக்கிறார் தொடர் வெற்றி மூலம் படத்தின் மிக பெரிய பலம் நயன்தாரா சரி படத்தை பற்றி பார்ப்போம்

நயன்தாரா,அதர்வா, ராஷி கண்ணா,அனுராக் காஷ்யாப் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி இசையில் அசு ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள் கதைச்சுருக்கம்: சிபிஐ ஒருவர் ஒரு சீரியல் கில்லர் ஒருவனை தேடி பிடிப்பதே படத்தின் கதை. அவர் கொலைகாரனை தேட தொடங்கியதும், கொலைகாரன் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய தொடங்குவதால் அவரது பணிகளில் மிகவும் கடினமாக்குகிறது.

இமைக்கா நொடிகள் படம், வழக்கமான திரில்லர் படமாகவே உருவாக்கமால் திர்ல்லர், சஸ்பென்ஸ், ஆக்ஷன் மற்றும் எமோஷன்களுடன் கூடிய படமாக உருவாகியுள்ளது. மூன்று மணி நேத்திற்கு 10 நிமிடம் குறைவான நேரம் வரை நீண்டு இருக்கும் இந்த படம் எந்த விதமான பிரபலமான காட்சிளோ அல்லது விளையாட்டுதனமான காட்சிக்ளோ இடம் பெறவில்லை. படத்தின் முதல் காட்சி பெங்களுரில் சைக்கோ திரில்லர், தனது பட்டியியல் உள்ளவர்களை கொலை செய்வதில் இருந்து தொடங்குகிறது

படத்தின் ஹீரோயினாக அஞ்சலி விகிரமாதித்தியா (நயன்தாரா) சிபிஐ அதிகாரியாக அறிமுகம் செய்யப்பட்டதுமே, சீரியசான வழக்கை கையில் கொடுத்து விடுகின்றனார். அவர் எப்படி இந்த வழக்கை கையாள போகிறார் என்பதை விளக்கும் காட்சிகள் தொடர்கின்றன. சைக்கோ கில்லர் வழக்கு, நகரையே ஆட்டி படைக்க தொடங்குகிறது.

அஞ்சலி தொடந்து வில்லனை தேட தொடங்குகிறார் ஒரு கட்டத்தில், வில்லான் அஞ்சலியின் குடும்பத்தினரை கொலை செய்ய தொடங்க, படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இந்நிலையில், ருத்ரா, மூத்த அதிகாரி நாராயணன் ஆகியோரின் தொல்லைகளை அஞ்சலி சமாளித்து கொண்டே வழக்கை அவர் கையாள்கிறார். இந்நிலையில் அர்ஜுன் (அதரவா) மற்றும் கீர்த்தா (ராசி கன்னா) ஆகியோரின் காதல் இந்த வழக்கிற்கு புதிய திருப்பத்தை அளிக்கிறது.

அஞ்சலி, ருத்ரா, அர்ஜுன் மற்றும் கீர்த்தனா ஆகியோரை சுற்றி கதை நகர தொடங்குகிறது. வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யாப் சிறப்பாக நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர்.

பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

விஜய்சேதுபதி, அதர்வா, ராசி தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்துள்ளனர்.

மொத்தத்தில் இமைக்கா நொடிகள் ஒவ்வொரு நொடியும் ரசனை Rank 4/5