Saturday, June 27
Shadow

மீண்டும் தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சூர்யாவின் “NGK”

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் NGK இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது இதனால் இந்த படம் தீபளிக்கு வெளியாகும் என்று கூறினார்கள் பின்னர் இல்லை என்றனர் மீண்டும் தீபாவளிக்கு வெளியாகும் என்றனர் ஆனால் மீண்டும் இன்று மாற்றம் என்று கூறியுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ஜிகே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. என்ஜிகே தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறினார்கள் பின்னர் இல்லை என்றனர் மீண்டும் தீபாவளிக்கு வெளியாகும் என்றனர் ஆனால் மீண்டும் இன்று மாற்றம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், படத்தின் வேலைகள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதைவிட அதிக நாட்களை எடுத்துக்கொள்வதால் படம் தீபாவளிக்கு வெளியாகாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உங்கள் அனைவருக்கும் ஒரு உறுதியளிக்கிறோம்… இது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு படைப்பாக நிச்சயம் இருக்கும். படம் மிகச்சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகவும், சிறந்ததொரு படைப்பை கூடிய விரைவில் உங்களின் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும் மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் திட்டமிட்டுள்ளதைவிட சிறிது கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், ‘என்ஜிகே’ படத்தை தீபாவளிக்குப் பிறகே வெளியிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறோம்.