Sunday, July 5
Shadow

கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது


கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னைப் போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார். சினிமா அழகியலான உலகம், பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள் என்று கூறியுள்ளார்.

முன்னொரு காலத்தில் கடவுளின் தேசமென்று சொல்லப்படும் கேரளாவில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம் தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடிச்சு வாரார்.


இந்த பூர்ணாவின் மேரேஜ் குறித்துப் பேச வேண்டும் என அவரது பெற்றோரை ஒரு கும்பல் தொடர்புகொண்டது. அவர்கள் தங்கள் வீடு கோழிக்கோடு என்று கூறியதுடன் மாப்பிள்ளை துபாய் உள்ளிட்ட பல பகுதிகளில் நகைக்கடை வைத்துள்ளதாகவும் தெரிவிச்சாய்ங்க.

பூர்ணா-வின் ரிலேட்டிவ் ஒருத்தர் வேற சொன்னதால் அந்தக் கும்பலை பூர்ணாவின் பெற்றோர் நம்பினர். போனில் பேசிக்கொண்டிருந்தவர்கள் பூர்ணாவைப் பெண் பார்க்க அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களின் கனிவான பேச்சை நம்பி வீட்டுக்கு வர சம்மதித்துள்ளனர். வீட்டுக்கு வந்தபிறகு அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து பூர்ணாவுக்குச் சந்தேகம் வந்துடுச்சு.

இதையடுத்து அவர்கள் கொடுத்த கோழிக்கோடு முகவரியில் விசாரித்தபோது அது போலியானதுன்னு தெரிஞ்சுது.

இதற்கிடையில் ஐதராபாத்தில் இருந்த பூர்ணாவின் மொபைல் எண்ணுக்கு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் போன் செஞ்சு துபாயில் உள்ள பிசினஸ்க்காகப் பத்து லட்சம் ரூபாய் உடனடியாக தேவைப்படுவதாகக் கேட்டுள்ளார். அந்த நபர் மீது சந்தேகமடைந்த பூர்ணா அம்மாவிடம் கேட்டுவிட்டுத் தருவதாகக் கூறியுள்ளார்.

அவசரம் என்பதால் அம்மாகிட்டே கேட்கவேண்டாம் உடனடியாகப் பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். சந்தேகம் வலுத்ததால் போன் செய்தது யார் என்று அறிய வீடியோ கால் செய்யும்படி பூர்ணா சொன்ன அடுத்த நொடி போனை கட்டாக்கிய அவர் உடனே சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

அதே சமயம் அந்தக் கும்பல் பூர்ணாவின் பெற்றோருக்கு போன் செய்து பணம் தராமல் இருந்தால் பூர்ணாவின் கேரியரை நாசம் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளது.

இதுகுறித்து பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மரட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரைக் கைது செய்தனர். அந்த நான்கு பேரின் புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியானதைப் பார்த்த ஆலப்புழாவைச் சேர்ந்த மாடலிங் நடிகை ஒருவர் உட்பட் ஏகப்பட்ட பேர் புகார் கொடுக்க வந்துகிட்டே இருக்காய்ங்க..