Saturday, June 27
Shadow

விஜய் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்த திட்டமிட்டுயிருக்கும் ஐடி

மழை விட்டாலும் தூவானம் நிக்கலை-ன்னு சொல்ற மாதிரி அதிரடியா ஷூட் ஸ்பாட் வீடியோடு மற்றும் ஆபீஸ்களில் நடந்த ஐ டி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், ஆக்டர் விஜய் உள்ளிட்ட மூவரும், மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி வியக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகங்க சம்மன் அனுப்பி இருக்கிறாய்ங்க.

ரஜினி-க்கு ஐ டி டுப்பார்மெண்ட் சலுகைக் காட்டுனதா வந்த செய்திகளுக்கு மறு நாள் அதிமுக-வில் அங்கம் வகித்தபடி கோலிவுட்டை கோலோச்சிக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்துச்சு.அப்போது பிகில் பட வசூல் தொடர்பாக ஏகப்பட்ட துண்டு சீட்டு முதல் டாக்குமெண்ட் எல்லாம் சிக்கிச்சாம்.

இதையடுத்து, பிகில் படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் சினிமா திரையரங்க அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கூடவே, பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறிச்சு நடிகர் விஜய்-யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் மிரட்டி அழைத்து வந்து அவர்கிட்டேயும், அவரோட மனைவி வீடியோ சங்கீதாவிடமும் விசாரணை நடந்துச்சு.

அதுவும் தொடர்ந்து 31 மணி நேரம் நடந்த சோதனையில் ஜோசப் விஜய் வீட்டில் இருந்து ஏதேதோ ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினாய்ங்களாம்..

இதுக்கிடையிலே பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவர் மறைச்சு வைத்திருந்த, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிட்டு போனவய்ங்க கல்பாத்தி அகோரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களை எடுத்துட்டு போனதா நூஸ் வந்துச்சு.

இப்ப இது தொடர்பா இன்னும் டீப்பான விசாரணை செய்யோணுமுன்னு நேரில்ஆஜராகும்படி, நடிகர் விஜய் உட்பட மூணு பேருக்கும், வருமான வரித்துறைஅதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்காய்ங்களாம்.