Monday, March 16
Shadow

இந்தியாவிலே நான் பார்த்து ரசித்த மிக சிறந்த நடிகர் விஜய் சேதுபதி – மாதவன்

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது விக்ரம் வேதா என்று தான் சொல்லணும் காரணம் இந்த படத்தின் ட்ரைலர் அந்த அளவுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது என்று சொல்லணும் அதுதோடு மேலும் ஒரு முக்கிய காரணம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி என்று தான் சொல்லணும் அதிலும் ஒரு சிறப்பு உண்டு இவர்களின் தோற்றம் அடுத்து இந்த படத்தின் கதைகளம் அடுத்து இந்த படத்தின் டைட்டில் இப்படி பல வித காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு இந்த படத்தில் நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு விழா நேற்று நடை பெற்றது இதில் இந்த படத்தில் நடிக்கும் மாதவன்,விஜய் சேதுபதி, கதிர்,வரலக்ஷ்மி, ஷரத்த ஸ்ரீநாத்,பிரேம்குமார்,மணிகண்டன்,விவேக் பிரசன்னா,அச்சுத குமார்,மற்றும் பலர் நடிப்பில் சாம் இசையில் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வினோத் ஒளிப்பதிவில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சசிகாந்த் தயாரிக்கும் இந்த படத்தை ஆர்யாவின் ஆட்டோ படத்தை இயக்கிய இருவர் இயக்குனர்கள் கணவன் மனைவி புஷ்கர் காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி நான் நடித்த படங்களில் நிச்சயம் இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக வரும் என்று கூறினார் அதோடு எப்பவும் போல தன்னுடன் நடித்த சக நடிகர்களை மிகவும் பாரட்டினார் குறிப்பாக கதிர் இந்த படத்துக்கு பிறகு கதிர் மிக பெரிய இடத்துக்கு போவார் என்று கூறினார் அதோடு மாதவனையும் மிகவும் பாராட்டினார் ,

பின்னர் பேசிய மாதவன் இறுதி சுற்றுக்கு பிறகு எனக்கு கிடைத்த மிக சிறந்த படம் என்று கூறினார். விஜய் சேதுபதியுடன் நடிக்க போகிறோம் ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் அவரின் நடிப்பை பார்த்து அதற்கு ஏற்ப நடிக்கவேண்டும் என்று தான் வந்தேன் ஆனால் அவரின் நடிப்பை பார்த்து வியந்தேன் நான் இந்தியாவில் உள்ள மிக முக்கிய நடிகர்களோடு நடித்து விட்டேன் ஆனால் விஜய் சேதுபதி மாதிரி ஒரு சிறந்த நடிகனை நான் பார்க்கவில்லை என்று மனம் திறந்து பாரட்டினார் மாதவன் ஆனால் அவர் அந்த இடத்திலும் கமல்ஹாசனை விட்டு கொடுக்கவில்லை கமலுக்கு பிறகு தான் என்று கூறினார்.

இயக்குனர்கள் பேசும் போது விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதையை மையாமாக தான் வைத்து இந்த கதை கருவை அமைத்துள்ளோம் என்று கூறினார்கள் படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது நான் இப்போது யாருக்கும் நன்றி சொல்ல விரும்பவில்லை இந்த படத்தின் வெற்றி விழாவில் நன்றி சொல்லபோகிறேன் காரணம் இந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது என்று கூறினார் ,

Leave a Reply