
பண்டிகை என்றாலே கொண்டாட்டம் அதோடு சினிமா இருக்கும் அதுதான் தமிழ் கலாச்சாரம் ஆனால் இங்கு படத்தின் தலைப்பே பண்டிகை இந்த படத்தில் நடிகர் கிருஷ்ணா,சரவணன்,கயல் ஆனந்தி, நிதின் சத்யா சபரிஷ்,கருணாஸ்,பிளாக் பாண்டி சண்முகராஜன் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் இசையில் பெரோஸ் எழுதி இயக்கம் படம் பண்டிகை இந்த படத்தின் மொத்த உரிமம் வாங்கி ரிலீஸ் செய்வது ஆரா சினிமாஸ் மகேஷ் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடை பெற்றது இதில் படத்தின் ட்ரைலர் திரையிட்டனர் இந்த ட்ரைலருக்கு மிகுந்த வரவேற்ப்பு இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் நடிகை விஜயலட்சுமி
இந்த நிகழ்ச்சியில் படகுழுவினர்கள் அனைவரும் பேசினார்கள் படத்தை பற்றியும் சக நடிகர்களை பற்றியும் பேசினார்கள். படம் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதை மற்றும் திரைகதை கொண்ட படம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் பைட் கருவாக கொண்டு வரும் படம் என்று தான் சொல்லணும் அதை காமெடி கலந்த ஒரு அக்ஷன் படமாக கொடுத்துள்ளர் இயக்குனர் என்பது சிறப்பு அதோடு இந்த படத்தின் டீசரை பார்த்தவுடன் இந்த படத்தின் மொத்த உரிமமும் வாங்கியுள்ளார் ஆரா சினிமாஸ் மகேஷ் அவர் பேசும் போது டோரா படத்துக்கு பிறகு நான் வாங்கும் படங்கள் பண்டிகை அடுத்து பலூன் இந்த இரண்டு இயக்குனர்களும் அடுத்த படம் எங்கள் நிறுவனத்துக்கு செய்யவேண்டும் என்று அன்புகட்டளை இட்டார் அதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்றார்.
இந்த படம் வரும் ஜூலை மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்றும் அறிவித்தனர்.