Thursday, November 19
Shadow

காதல் உணர்வுகளைப் பேசும் ‘இற இறகாக..’ – ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

காதல் உணர்வுகளைப் பேசும் ‘இற இறகாக..’ – ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

கே. மணிகண்டன் – திவ்யா ஸ்ரீபாதா ஜோடியில் உருவாகியுள்ள அழகான காதல் பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ளார்!

கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இற இறகாக..’ வெளியாகியுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ ஏற்கெனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

ஜோதி கண்ணா எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ளார். மென்மையான இசையும் மனதை வருடும் வரிகளும் இணைந்து உருவாகியுள்ள ‘இற இறகாக..’ பாடல், படத்தின் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையிலான காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது.

கடினமான சூழல்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் எதிர்கொண்டு வரும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் காதல் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் பாடல் உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கிறது. நாயகனின் அன்றாடப் போராட்டங்களையும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும் தாண்டி, காதலியின் அன்பில் கிடைக்கும் நிம்மதியும் நம்பிக்கையும் அவனுக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் திவ்யா ஸ்ரீபாதா, கே. மணிகண்டனுடன் இணைந்து நடித்துள்ளார்.

காதலின் மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் பாடல், அதிரடியான கதைக்களத்தைக் கொண்ட ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியமான உணர்வுப்பூர்வமான தருணங்களைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ்குமார் எழுதி இயக்கும் இப்படத்தை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர், ஊழல் நிறைந்த அமைப்பின் அழுத்தங்களுக்கு ஆளாகிறார். அப்போது, அநீதிக்கு அடிபணிவதா அல்லது அதை எதிர்த்துப் போராடுவதா என்ற இக்கட்டான நிலை அவருக்கு உருவாகிறது. தனது வாழ்க்கையையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொடங்கும் அவரது போராட்டம், நாளடைவில் தனிமனித எல்லைகளைக் கடந்து மக்களுக்கான போராட்டமாக மாறுகிறது.

தான் ஒருபோதும் விரும்பாத தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் அந்த மனிதன், தனது எதிர்ப்பின் மூலம் மக்களின் குரலாக மாறுகிறான். போராட்டத்தின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க, ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் பாதுகாவலனுக்கும் இடையிலான வேறுபாடு மறையத் தொடங்குகிறது. அதிகாரம், ஊழல், எதிர்ப்பு, மக்கள் நலன் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

கே. மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

‘Ira Iragaaga’, the Second Single from K. Manikandan’s Makkal Kaavalan, Released!

A soulful romantic track composed and sung by Nivas K. Prasanna, featuring K. Manikandan and Divya Sripada, is now out!

The makers of the upcoming action drama Makkal Kaavalan, starring K. Manikandan, have released the film’s second single, ‘Ira Iragaaga’. Following the positive response to the first single, ‘Ignore’, Birla Studios and Neelam Studios have now unveiled a soulful romantic number that offers a glimpse into the emotional side of the film.

Composed and sung by Nivas K. Prasanna, with lyrics penned by Jothi Kanna, ‘Ira Iragaaga’ beautifully captures the blossoming romance between the protagonist and his love interest, played by Divya Sripada, who makes her acting debut with this film.

The song explores how love can bring hope and comfort into the life of a man caught up in a world of hardships and struggles. Amid his demanding profession and everyday challenges, the protagonist finds a sense of peace and renewed faith in life through the unconditional love of his beloved. The melody and heartfelt lyrics beautifully convey the transformative power of love.

Offering a refreshing emotional dimension to an action-driven narrative, ‘Ira Iragaaga’ captures the magic of falling in love and reflects the softer side of the protagonist, a man who stands up against injustice and fights for the people.

Produced jointly by Birla Studios and Neelam Studios, led by Pa. Ranjith and Aditi Anand, Makkal Kaavalan is written and directed by Santhosh Kumar.

The film revolves around a police officer who aspires to lead a life of dignity. However, when he finds himself trapped within a corrupt system, he is left with only two choices: surrender or resist. What begins as an individual’s struggle for survival gradually develops into a much larger battle, eventually forcing him to become a leader he never intended to be.

As the conflict intensifies and the cost of resistance continues to rise, the distinction between an ordinary man and a people’s protector begins to fade. Blending themes of corruption, courage, resistance and social responsibility, the film promises a compelling story.

Starring K. Manikandan in the lead, Makkal Kaavalan is slated for a worldwide theatrical release on December 4, 2026.

Watch ‘Ira Iragaaga’ here: