அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்’. மு.மாறன் இயக்கும் இந்த படத்தை `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடிக்கும் இந்த படத்தில் அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. சாம்.சி.எஸ். இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.