Thursday, October 29
Shadow

விரைவில் வெளிவருகிறது புதுமுக கலைஞர்கள் பணியாற்றும் இதுதான் காதலா

குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், வி.எஸ். முருகன் தயாரித்து வரும் படம். இதுதான் காதலா.

இந்த படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்த விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதால், இதில் விஞ்ஞான மனிதனாக இந்த படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம் தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்தி காதலையும், கம்ப்யூட்டரையும் இணைந்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இது தான் காதலா படத்தை தயாரித்து வருகிறார்கள்.

இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குனர் ராஜசிம்மன், காதல் சுகுமார், கூல்சுரேஷ், பாலு, ஆனந்த், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதவி கணேஷ்ராஜாவும், இசையை தேசிய விருது பெற்ற சங்கர் அமைத்திருக்கிறார். எஸ்.எம்.பி. சுப்பு, கலை ராஜரத்தினம் பாடல்கள் கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், ,மவுலன், ராஜசிம்மா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த் படத்தை வி.எஸ். முருகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு மற்றும் டைரக்ஷன் பணிகளை ராஜசிம்மா செய்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் வெளியீடு சமீபத்தில் எம்.எம்.தியேட்டரில் நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஊமைவிழிகள் புகழ் டைரக்டர் ஆர். அர்விந்த்ராஜ், படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ராஜசிம்மன் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.