
தமிழ் சினிமாவில் நல்ல கருத்துகளை சுமந்து வரும் படங்கள் எப்பவும் மாபெரும் வெற்றியை தேடி கொண்டு இருப்பது தவிரக்கமுடியாத விஷயம் சமுதாயத்தின் பிரச்சனைகள் எடுத்து சொல்லும் படம் தான் இவன் தந்திரன் தமிழகத்தில் இல்லை இந்தியாவில் பல கோடி மாணவர்களின் யுனிவர்சல் பிரச்சனை தான் படத்தின் கரு அது கல்வியை வியாபாரமாக பார்க்கும் நாடு இந்தியா மட்டும் தான் என்பதை மிகவும் தெளிவான திரைகதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கண்ணன்
இதுவரை மசாலா படங்களை எடுத்து வந்த இயக்குனர் கண்ணன் தன் பாணியை மாற்றி மிக சிறந்த கதை களத்துடன் வந்து மாபெரும் வெற்றியை படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் தனி ஒருவன் படத்துக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் பிரமாதமான திரைகதை கொண்ட படம் என்று தான் சொல்லணும் சமுதாயா பிரச்சனைகளை சொல்லும் படங்களில் கதை என்பதை விட திரைகதை தான் முக்கியம் அடுத்து வசனங்கள் தன முக்கியம் அந்த விதத்தில் இயக்குனர் கண்ணன் மிக அருமையான திரைகதை மற்றும் தெறிக்கும் அதே சமயம் சிந்திக்கும் வசங்களை கொடுத்து வெற்றியை கண்டுள்ளார் என்று தான் சொல்லணும். சரி படத்தின் கதை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் விவரம் பாப்போம்
கௌதம் கார்த்திக்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆஷா, ஆர்,ஜே,பாலாஜி பாரத்ரெட்டி, பாரத், ஹாரிஸ் கோபி,சூப்பர் சுப்புராயன் தேவராஜ் , ஸ்டன்ட் சில்வா, மற்றும் பலர் நடிப்பில் SSதமன் இசையில் பிரசன்ன குமார் ஒளிப்பதிவில் ஸ்டன்ட் சில்வா சண்டையில் அருமையான கலை இயக்குனர் சிவகுமார் யாதவ் கலை இயக்கத்தில் இயக்குனர் கண்ணனின் கதை திரைகதை வசனம் மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் இவன் தந்திரன்
இன்று வருடத்துக்கு மூன்று லட்சம் மாணவ மாணவிகள் பொறியல் கல்லூரியில் படிகிறார்கள் இந்த பொறியல் கல்லூரிகளில் நடக்கும் மோசடியை மிக அருமையாக தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர். கல்லூரி நிர்வாகமும் அரசியல்வாதிகளும் எப்படி எல்லாம் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை பொறியல் கல்லூரி மாணவர்கள் படித்தும் வேலை இல்லாமல் எப்படி திண்டாடுகிராகள் என்பதையும் மிக தெளிவாக சொல்லி தன் திரை கதை மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதைக்கு தேவையான நட்சத்திரங்கள் என்று தான் சொல்லவேண்டும் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் இயக்குனர் கண்ணன் தன் பிடியில் வைத்து கொண்டு மிக தெளிவாக இயக்கியுள்ளார் எந்த இடத்திலும் தன்னையும் தன் கதையையும் விட்டு கொடுக்காமல் இயக்கி இருப்பது பெரும் பலம் அதற்க்கு ஏற்ப நடிகர்களின் ஓத்துழைப்பு முக்கியம் அதை மிக தெளிவாக எல்லா நடிகர்களும் இயக்குனருக்கு கொடுத்துள்ளனர் என்று தான் சொல்லணும்.
கௌதம் கார்த்திக் முதல் முறையாக இயக்குனரின் நடிகராக வலம் வந்துள்ளார். என்று தான் சொல்லணும் கதையும் தன் கதாபாத்திரமும் உணர்ந்து மிக இயல்பாக யதார்த்தமாக நடித்துள்ளார் இது கௌதம் கார்த்தியா என்று வியக்கும் அளவுக்கு மிக அழகாக நடித்துள்ளார். புலிக்கு பிறந்தது எப்பவும் புலி தான் என்று சொல்வது வழக்கம் ஆனால் இந்த புலியிடம் வேகம் விவேகம் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. பல இடங்களில் நடிகர் கார்த்தி அவருக்கு தெரியாமலே வந்து போகிறார் என்று தான் சொல்லணும் அதே போல தெறிக்கும் வசனங்கள் அதை அலட்டி கொள்ளாமல் மிக எதார்த்தமாக பேசி நடித்து இருப்பது மேலும் பலம் இந்த படம் கௌதம் கார்த்திக் தானும் ஒரு சிறந்த நடிகன் என்று நிருபித்துள்ளார். இதையே அவர் அதாவது இயக்குனரின் நடிகராக இருக்கவேண்டும் அதில் வெற்றி நிச்சயம் உண்டு என்பதுக்கு ஒரு எடுத்துகாட்டு
ஆர். ஜே, பாலாஜி படத்துக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் மிக சிறந்த நேர்த்தியான நடிப்பு காமெடியுளும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். பல அரசியல் வசனங்களை பாலாஜி ஸ்டைலில் பேசி வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசியுள்ளார் ஐ.டி கம்பனில் வேலை புரிபவர்கள் கஷ்டத்தை ஒரே காட்சியில் மிக அருமையாக வசனம் மூலம் சொல்லி இருப்பது மேலும் சிறப்பு
நாயகி ஷரத்த ஸ்ரீநாத் முதல் படத்திலே முத்திரை பதித்துள்ளார் மிகவும் மென்மையாக காதல் கட்சிகளிலும் சரி கௌதம் கார்த்தியுடன் மோதும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார் நிச்சயம் தமிழ் சினிமா அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வில்லனாக வரும் சூப்பர் சுப்புராயன் சிறந்த சண்டை பயிற்சியாளர் என்பதை விட தான் ஒரு சிறந்தா நடிகர் என்று நிருபித்துள்ளார். அரிசியல் வாதியாக வாழ்ந்துள்ளார் அதே போல படத்தில் ஏற்று இருக்கும் அனைத்து நடிகர்களும் அவர்கள் பாத்திரத்தை மிகவும் உணர்ந்து நடித்துள்ளனர். படத்துக்கு மேலும் பலம் ஒளிபதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் தமன் தேவையில்லாத பாடல்கள் என்று இல்லாமல் படத்துக்கு என்ன தேவையோ அதை மிகவும் சிறப்பகா அமைத்துள்ளனர் அதே போல கலை இயக்குனர் அருமையான நாயகியின் வீடு கௌதம் கார்த்திக் வீடு இவையெல்லாம் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.
மொத்தத்தில் இவன் தந்திரன் உண்மையானவன் Rank4/5
