
‘ஜெய் ஹோ’ முழக்கத்துடன் தொடங்கும் ‘ஆபரேஷன் டிரால்’ – தேசப்பற்றும் த்ரில்லரும் கலந்த அதிரடி உலகிற்கு அறிமுகம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடல் ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், தேசிய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் காஷ்மீர் பின்னணியில் நடைபெறும் தீவிரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
‘ஜெய் ஹோ’ என்ற தலைப்பே தேசப்பற்று மற்றும் வெற்றியின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நிலையில், படத்தின் கதை சொல்லப்போகும் உலகத்திற்கான இசை அறிமுகமாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதீர் யாதுவன்ஷியின் கம்பீரமான குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இர்ஷாத் தலால் வரிகளை எழுதியுள்ளார். படத்தின் இயக்குநர் ரதீஷ் வேகாவே இசையமைப்பையும், பின்னணி இசையையும் கவனித்துள்ளார்.
‘ஜெய் ஹோ’ என்ற வார்த்தை இந்திய ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் புகழ்பெற்ற பாடலை நினைவுபடுத்தினாலும், அந்தப் பாடலின் இசை அல்லது பாணியைப் பின்பற்றாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ற வகையில் தேசப்பற்று உணர்வை புதிய இசை வடிவில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுதீர் யாதுவன்ஷியின் அழுத்தமான குரலும், தேசப்பற்று நிறைந்த வரிகளும் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. ‘துரந்தர்’ படத்தின் டைட்டில் பாடல் மற்றும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் ‘ஆரி ஆரி’ பாடல் மூலம் கவனம் பெற்ற சுதீர் யாதுவன்ஷி, ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தீவிரமான களத்துக்கும் பிரம்மாண்டமான ஆக்ஷன் உலகத்துக்கும் பொருந்தும் வகையில் பாடலைப் பாடியுள்ளார்.
ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய ஆயுதப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. புலனாய்வு நடவடிக்கைகள், ஆக்ஷன் காட்சிகள், தேசப்பற்று மற்றும் மனித உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகும் இப்படம், வழக்கமான ஆக்ஷன் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஜெயசூர்யாவுடன் முரளி ஷர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால், சிராஜுதீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் விக்ரம் கோச்சார், யஷ் பால் கேரா, மிர் சர்வார், சந்தன் பிஷ்ட், ஹன்சிகா ஜாங்கிட், வாணி டோக்ரா, ஜெய் தாக்கூர், விஜய் திரிவேதி, மன்ஹர் சிங் ட்ரிவியா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையின் பிரம்மாண்டத்தையும் களத்தின் இயல்புத்தன்மையையும் திரையில் கொண்டு வருவதற்காக பல்வேறு நிலப்பரப்புகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார். நஜோஸ் ஒளிப்பதிவையும், ஷஃபீக் வி.பி. படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். நோபிள் ஜேக்கப் திட்ட வடிவமைப்பையும், சஜீஷ் தாமரச்சேரி தயாரிப்பு வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். சுனீஷ் சோதரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனையையும் கவனித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘ஜெய் ஹோ’, ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் தேசப்பற்று நிறைந்த கதைக்களத்தையும் அதிரடி உலகத்தையும் ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் பாடலுக்கே கிடைத்துள்ள கவனம், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

‘Jai Ho’ Sets the Tone for ‘Operation Trall’ – Patriotism and Action Take Centre Stage!
Marking the occasion of Independence Day, the first song from the upcoming pan-Indian investigative thriller ‘Operation Trall’, starring Jayasurya, has been released. Produced by Goodwill Entertainments, the film is set against the backdrop of national intelligence operations and intense incidents unfolding in the Trall region of Jammu & Kashmir.
Titled ‘Jai Ho’, the song captures the spirit of patriotism, courage and national pride while offering audiences their first musical glimpse into the world of the film. Popular playback singer Sudhir Yadavanshi has lent his powerful voice to the track, with lyrics penned by Irshad Dalal. Director Ratish Vega has composed both the music and background score for the film.
While the title ‘Jai Ho’ may remind Indian audiences of A.R. Rahman’s iconic song, the makers have clarified that the track does not draw directly from that composition or its musical style. Instead, ‘Operation Trall’ gives the familiar phrase a fresh interpretation, using it to convey the film’s themes of patriotism, courage and pride in the nation.
Sudhir Yadavanshi’s commanding vocals add further intensity to the song. Known for his work on the title track of ‘Dhurandhar’ and ‘Aari Aari’ from ‘Dhurandhar: The Revenge’, the singer brings the required scale and energy to a track that reflects the film’s intense narrative and action-driven setting.
Written and directed by Ratish Vega, ‘Operation Trall’ is an investigative thriller inspired by an armed confrontation between Indian security forces and terrorists in the Trall region of Jammu & Kashmir. Combining intelligence operations, high-octane action and strong patriotic elements, the film explores a gripping story set against a sensitive and strategically significant backdrop.
Jayasurya leads an ensemble cast that includes Murali Sharma, Vinay Rai, Siddique, Sai Kumar, Nandalal Krishnamurthy, Rithika Singh, Kavya Shetty, Anson Paul and Sirajudeen in prominent roles. Bollywood actors including Vikram Kochhar, Yashpal Khera, Mir Sarwar, Chandan Bisht, Hansika Jangid, Vani Dogra, Jai Thakur, Vijay Trivedi and Manhar Singh Trivia are also part of the film.
The film has been shot across several locations, including Kerala, Coimbatore, New Delhi, Kullu, Manali, Mussoorie and Ladakh, adding scale and visual variety to its narrative. ‘Operation Trall’ is gearing up for a worldwide release in Malayalam, Tamil, Telugu, Kannada and Hindi.
Ratish Vega has written the story and screenplay and is directing the film. Sunimol Jabi serves as co-producer. Najos is handling cinematography, while Shafeeq V.P. is in charge of editing. Noble Jacob has handled the project design, with Sajeesh Thamarassery overseeing production design and Suneesh Sodharan handling art direction. Costume design is by Sameera Saneesh and Saritha Jayasurya, while Ronex Xavier is responsible for the actors’ makeup.
Released as the film’s first musical offering, ‘Jai Ho’ introduces audiences to the patriotic and action-packed world of ‘Operation Trall’. The song has also added to the anticipation surrounding the upcoming pan-Indian investigative thriller.
