‘ஜெய் ஹோ’ முழக்கத்துடன் தொடங்கும் ‘ஆபரேஷன் டிரால்’ – தேசப்பற்றும் த்ரில்லரும் கலந்த அதிரடி உலகிற்கு அறிமுகம்!
‘ஜெய் ஹோ’ முழக்கத்துடன் தொடங்கும் ‘ஆபரேஷன் டிரால்’ – தேசப்பற்றும் த்ரில்லரும் கலந்த அதிரடி உலகிற்கு அறிமுகம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடல் ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், தேசிய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் காஷ்மீர் பின்னணியில் நடைபெறும் தீவிரமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.
‘ஜெய் ஹோ’ என்ற தலைப்பே தேசப்பற்று மற்றும் வெற்றியின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நிலையில், படத்தின் கதை சொல்லப்போகும் உலகத்திற்கான இசை அறிமுகமாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதீர் யாதுவன்ஷியின் கம்பீரமான குரலில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இர்ஷாத் தலால் வரிகளை எழுதியுள்ளார். படத்தின்...
