
தென்காசியில் பூஜையுடன் தொடங்கியது ஜெய்யின் புதிய ஹாரர் காமெடி படம்!
தியாகராஜா டாக்கீஸ் தயாரிக்கும் முதல் படத்தில் ஜெய் – டெல்னா டேவிஸ் ஜோடி!
தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று அந்த வகையில் உருவாகிறது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். ஹாரர் மற்றும் காமெடி அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது.
படப்பிடிப்பின் தொடக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். சண்டைப் பயிற்சியை ராம் குமார் மேற்கொள்கிறார். தயாரிப்பு நிர்வாகியாக ரங்கராஜ் பெருமாள், ஆடை வடிவமைப்பாளராக அபினந்தினி எம்., நிர்வாகத் தயாரிப்பாளராக இளங்கோ ஏகாம்பரம், தலைமை தயாரிப்பு நிர்வாகியாக கே. எஸ். ஹேம்ராஜ், ஒப்பனைக் கலைஞராக எஸ். ஏ. சண்முகம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். ஆனந்தன் படத்தின் ஸ்டில்ஸ் பணிகளைக் கவனிக்கிறார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 23 நாட்கள் நடைபெற உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, சிவ பிரசன்னாவின் இயக்குநர் அறிமுகம், ஜெய்யின் ஹாரர் காமெடி கதாபாத்திரம் எனப் பல அம்சங்களுடன் உருவாகும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு
- தயாரிப்பு நிறுவனம்: தியாகராஜா டாக்கீஸ்
- தயாரிப்பாளர்: ஏ. எம். பிரபாகரன்
- இயக்கம்: சிவ பிரசன்னா
- நடிகர்கள்: ஜெய், டெல்னா டேவிஸ்
- ஒளிப்பதிவு: விஜய் உலகநாத்
- படத்தொகுப்பு: வி. ஜே. சபு ஜோசப்
- கலை இயக்கம்: ஜெயச்சந்திரன்
- சண்டைப் பயிற்சி: ராம் குமார்
- தயாரிப்பு நிர்வாகம்: ரங்கராஜ் பெருமாள்
- ஆடை வடிவமைப்பு: அபினந்தினி எம்.
- நிர்வாகத் தயாரிப்பாளர்: இளங்கோ ஏகாம்பரம்
- தலைமை தயாரிப்பு நிர்வாகி: கே. எஸ். ஹேம்ராஜ்
- ஒப்பனை: எஸ். ஏ. சண்முகம்
- ஸ்டில்ஸ்: ஆனந்தன்

Jai’s New Horror Comedy Begins Filming in Tenkasi with a Traditional Pooja Ceremony!
Thyagaraja Talkies’ Debut Production Stars Jai and Delna Davis in the Lead Roles
Actor Jai is set to entertain audiences with a new horror comedy film, tentatively titled Thyagaraja Talkies – Production No. 1. The film marks the maiden production venture of Thyagaraja Talkies and is directed by debutant filmmaker Siva Prasanna.
The shooting of the film commenced with a traditional pooja ceremony in Tenkasi, Tamil Nadu. Jai plays the lead role, while actress Delna Davis has been cast opposite him. The film is being produced by A. M. Prabhakaran under the banner of Thyagaraja Talkies.
Tenkasi District Collector Ranjit Singh, IAS, attended the inaugural ceremony as the chief guest and formally switched on the camera to mark the beginning of the shoot. In the presence of businessman S. Saminatha Pandian, producer A. M. Prabhakaran sounded the clapboard to officially commence filming.
The film is being developed as a horror comedy, blending elements of horror and humour. The team has announced that the shooting schedule in Tenkasi will continue for 23 consecutive days, beginning with the inaugural day.
Vijay Ulaganath is handling the cinematography, while Jayachandran is in charge of art direction. V. J. Sabu Joseph serves as the editor, and Ram Kumar is responsible for the stunt choreography.
The technical team also includes production executive Rangaraj Perumal, costume designer Abinandhini M, executive producer Ilango Ekambaram, chief production executive K. S. Hemraj, makeup artist S. A. Shanmugam, and still photographer Anandhan.
With Jai in the lead, Siva Prasanna making his directorial debut, and Thyagaraja Talkies launching its first production, the film brings together an interesting combination of talent for a new horror comedy venture. Further updates about the film are expected in the coming days.
Cast
- Jai
- Delna Davis
Technical Crew
- Production House: Thyagaraja Talkies
- Producer: A. M. Prabhakaran
- Director: Siva Prasanna (Debut)
- Cinematography: Vijay Ulaganath
- Editor: V. J. Sabu Joseph
- Art Director: Jayachandran
- Stunt Choreography: Ram Kumar
- Production Executive: Rangaraj Perumal
- Costume Designer: Abinandhini M
- Executive Producer: Ilango Ekambaram
- Chief Production Executive: K. S. Hemraj
- Makeup Artist: S. A. Shanmugam
- Stills Photographer: Anandhan
