

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்ற ஜீவா, தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகும் ‘1983 வேல்ட் கப்’ படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.
இது பத்தி ஜீவா-விடம் கேட்ட போது, ரொம்ப ஹேப்பியா இருக்கு, ‘1983 வேர்ல்ட் கப்’ என்ற படத்துல என் கூட ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி. பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ, அது மாதிரி இந்த படமும் இருக்கும். 100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்.
நான் ஏற்கெனவே கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன், ஜெயிச்சிருக்கேன், அப்படிப்பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்.
1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்.
கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங், அதுக்கு இப்பவே தயாராயிட்டோம். அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே…தமிழ்நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே, அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே.
மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது. மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார். இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்.
லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு. – அப்படீன்னார்
