
மிஷ்கின் டைரக்ஷனில் திமுக வாரிசு நடிகரான உதயநிதியை வச்சு ‘சைக்கோ’ன்னு ஒரு படம் பண்ணியது குறிச்சு, அது 24 ஜன்வரியில் ரிலீஸாக ரெடியாகுதுன்னும் நம்ம ஆந்தை குரூப்-பில் கூட விரிவா தகவல் சொல்லி இருந்தோம்..
ஆனா அந்த படத்துக்கு தடை வாங்க முயற்சி நடக்குதுன்னு இப்போ ஒரு தகவல் வருது..
அதாவது கோலிவுட்டை சுற்றிக் காட்டிய ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயா என்பவரை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி இதே சைக்கோ கதை அவரது அப்பாவான ரகுநந்தனுக்கு சொல்லி அவரை புரட்யூசராக்கி அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கி ஏமாத்தியதை கோர்ட்டில் முறையிட்டு இருப்பவர் மறுபடியும் நீதி தேவைதையிடம் முறையிடப் போறாராம்

அதாவது சென்னை அடையாரைச் சேர்ந்த ரகுநந்தன் என்பவர் Transworld Telecomunication Private Limited என்ற பெயரில் சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், தனது மகன் ஷ்யாமை வைத்து படம் எடுக்க முடிவு செய்து, இயக்குநர் மிஷ்கினை அணுகியுள்ளார். புதுமுக நடிகர் ஷ்யாமை வைத்து படம் இயக்க ஒப்புக்கொண்ட மிஷ்கின், அதற்காக 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தெரிகிறது.
இதற்கு சினிமா தயாரிப்பாளர் ரகுநந்தன் ஒப்புக்கொள்ள, 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம், நூறு ரூபாய் பத்திரத்தில், இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பேசப்பட்ட சம்பளத்தில், முன்பணமாக, ஒரு கோடி ரூபாய்க்கான 2 காசோலைகளை இயக்குநர் மிஷ்கினுக்கு வழங்கியுள்ளனர். ஷ்யாமின் பெயரை மைத்ரேயா என மாற்றிய இயக்குநர் மிஷ்கின், சவரக்கத்தி படம் செய்து கொண்டிருந்ததால், அதை முடித்துவிட்டு, படத்தை இயக்குவதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் கமிட் ஆன மிஷ்கின், அந்த படத்தை முடித்துவிட்டு, படத்தை இயக்குவதாக, மீண்டும் சமாதானம் செய்திருக்கிறார். பிரபல இயக்குநர் ஆயிற்றே என, தயாரிப்பாளர் ரகுநந்தனும், புதுமுக நடிகரான மைத்ரேயா எனப்படும் ஷ்யாமும் ஒப்புக்கொண்டுள்ளனர்… துப்பறிவாளன் படம் வெளியாகி ஓடி, பெட்டிக்கே திரும்பிவிட்ட நிலையிலும், மைத்ரேயாவிடம் கூறிய சைக்கோ கதையை மையமாக வைத்து, படத்தை இயக்க மிஷ்கின் முன்வரவில்லை… ஆனால், சவரக்கத்தி ஆடியோ ரிலீசின் போதும், இதர சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் மிஷ்கின், தாம் சைக்கோ என்ற பெயரில், புதுமுக நடிகர் மைத்ரேயாவை வைத்து படம் இயக்கப்போவதாக பேசியிருக்கிறார்….
மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், தயாரிப்பாளர் ரகுநந்தனும், புதுமுக நடிகர் மைத்ரேயா எனப்படும் ஷ்யாமும் இயக்குநர் மிஷ்கினின் அலுவலகத்திற்கு, படையெடுத்துள்ளனர். படம் இயக்குவது பற்றி வாய் திறக்காத மிஷ்கின், தனது சம்பளத்தில் முன்பணமாக பெற்ற ஒரு கோடி ரூபாயை திருப்பி தர முன்வராததால், ரகுநந்தனும், ஷ்யாமும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, திரைப்பட இயக்குநர் மிஷ்கினை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அந்த எண் சுவிட் ஆப் என வந்தது. அவரது அலுவகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஷ்யாமிடம் கூறிய கதையான “சைக்கோ” படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின் பிசியாக இருப்பதாக, ஊழியர்கள் கூறினர்…
ஆம்.. உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து டபுள் மீனிங் புரடக்ஷனுக்கு ‘சைக்கோ’ படத்தை இயக்கித்தர ஒத்துக்கொண்டு இதே சைக்கோ கதையைதான் எடுத்திருக்காராம் மிஷ்கின்.
இதுக்கிடையிலேயே வயக்கம் போல இங்குள்ள புரொடியூசருங்க பஞ்சாயத்து பண்ண முன் வராத நிலையில் கோர்ட்டுக்குப் போனார் ரகுநந்தன். எங்களுக்கு தொகையைத் திருப்பித் தராமல் படத்தை ஷூட் செய்யக்கூடாதென்று அவர் கோரிக்கை வைக்க, சைக்கோ ஷூட் நிறுத்தப்பட்டது.
இதனால் மிஷ்கினை உதயநிதி தரப்பு நெருக்க, தானே முன்வந்து ரகுநந்தனிடம் மத்தியஸ்தம் பேசிய மிஷ்கின் அக்டோபர் மாதம் 50 லட்சம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தலா 25 லட்சம் என்று தந்து விடுவதாகச் சொல்லி ஷூட்டிங்க தொடங்க, அக்டோபர் மாதம் பணம் தரப்படவில்லையாம். மீண்டும் கோர்ட். நிறுத்து ஷூட்டிங்கை என்று சொல்ல உடனே உள்ளே வந்த மிஷ்கின் 50 லட்சத்துக்கு செக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், அதற்கு மேல் நவம்பர், டிசம்பரில் பேச்சு மூச்சில்லை. மீண்டும் நீதிமன்றத்திடம் போனார் ரகுநந்தன். அங்கே சைக்கோ தயாரிப்பாளர்கள் உள்ளே வந்து இயக்குநர் செய்த தவறுக்கு நாங்கள் இன்வெஸ்ட் செய்த படத்தை நிறுத்திக் கொண்டிருந்தால் பாதிப்பு எங்களுக்குதான் என்று தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்ல, அப்படியானால், மிஷ்கின் சம்பளத்தில் பாக்கி இருந்தால் அதைப் பிடித்து கோர்ட்டில் கட்டச் சொல்லி உத்தரவு வந்துருக்காம்.
இப்ப ரிலீஸ் டேட் சொன்ன நிலையில் நாளைக்கு ரகு தரப்பு மீண்டும் ‘ஐயா எனக்கொரு நீதி சொல்லுங்கய்யா’-ன்னு கேட்ட தயாராயிட்டாய்ங்களாம்..
அப்ப சைக்கோ ரிலீஸூக்கு தடை வரும்? ஆனா வராது-ன்னு இப்போவே பேச ஆரம்பிச்சாய்ங்க
