
கிராமத்து மண்வாசனையுடன் குடும்ப உணர்வுகளை பேச வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… ஃபர்ஸ்ட் லுக்கே ரசிகர்களின் மனதை வென்றது!
நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான குடும்பக் கதையாக உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
பிரம்மாண்டமான காட்சிகளோ, அதிரடி தோற்றங்களோ இல்லாமல், ஒரு அப்பாவின் வாழ்க்கை, குடும்ப பாசம், உறவுகளின் ஆழம் மற்றும் மண்ணோடு கலந்த வாழ்வியலை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, “நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவை இப்படிப்பட்ட இயல்பான கிராமத்து கதாபாத்திரத்தில் பார்க்கப் போகிறோம்” என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம், மனித நேயம், வாழ்க்கையின் எளிமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்ற கிராமப்புற பகுதிகளில், காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியதுடன், கதையின் உணர்வுகள் திரையில் வலுவாக வெளிப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுமையான கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படம் என்பதால், ‘தகப்பன்’ அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் மண்ணின் மண்வாசனை வீசும் கதையில் ஜீவா நடிப்பது ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தில், தேசிய கவனம் பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். கதையின் உணர்வுகளை மேலும் செழுமையாக்கும் வகையில், இசையமைப்பாளராக சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் பணியாற்றுகிறார். முன்னதாக பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், இப்படத்திற்கு தனித்துவமான இசை அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்க, K.B. நந்தபாலன் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
வலுவான கதைக்களம், அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள், திறமையான நடிகர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மட்டுமல்லாமல், சமீப காலங்களில் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ‘தகப்பன்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Jiiva’s Thagappan First Look Wins Hearts; Rural Family Drama Completes 50% Shoot
The first look of actor Jiiva’s upcoming film Thagappan, produced by Lark Studios, has received an overwhelming response from fans and movie enthusiasts. The poster, which was recently unveiled, has generated widespread appreciation on social media for capturing the emotional depth and authentic rural essence of the film.
Unlike conventional first-look posters that focus on action or glamour, Thagappan introduces audiences to a heartfelt story rooted in family values, relationships, and the culture of rural Tamil Nadu. The poster has sparked curiosity among fans, with many praising Jiiva’s refreshing return to a village-based character after a long gap.
Directed by Ra. Venkat, Thagappan is set against the backdrop of Madurai and its surrounding regions. The film revolves around the emotional bond between a father and son, celebrating family relationships, human emotions, and the simplicity of rural life through a deeply moving narrative.
The production team has also announced that 50% of the film’s shooting has been successfully completed. Initially planned as a single-schedule shoot, the production has been progressing smoothly. During filming in various village locations, several local residents who witnessed the scenes reportedly appreciated the team’s work, further raising expectations for the film.
Thagappan marks Jiiva’s return to a full-fledged rural entertainer after Thenavattu. The makers believe the film will stand out as one of the most significant and emotionally engaging projects in the actor’s career. Following the success of his recent release TTT, Jiiva’s choice to headline another story deeply rooted in Madurai’s culture has generated considerable excitement among audiences.
Actress Rajisha Vijayan plays the female lead in the film. Music is composed by independent musician Marshall Robinson, who has previously collaborated with several leading composers, including Anirudh Ravichander. His score is expected to enhance the film’s emotional appeal and rustic atmosphere.
Produced by K. Kumar, Thagappan features cinematography by M. Sukumar, editing by Nagooran Ramachandran, and production design by K.B. Nandhapalan. The action sequences are choreographed by Mahesh Mathew, costumes are designed by M. Selvaraj and Rithesh Selvaraj, while T. Udhay Kumar handles sound design. Stills are by Anbu, with R. Balakumar serving as Executive Producer, Prithiviraja Chinnasamy as Head of Distribution, Yuvaraj as PRO, and Dinesh Ashok as the publicity designer. The film’s audio rights have been acquired by Think Music.
With a compelling storyline, an accomplished technical team, and a talented cast, Thagappan is shaping up to be an important milestone in Jiiva’s film career. The makers are confident that the film will emerge as one of Tamil cinema’s most talked-about family dramas, resonating with audiences through its emotional storytelling and authentic rural backdrop.
The team is planning to release Thagappan in theatres worldwide in December this year.
