Wednesday, December 7
Shadow

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் நடைபெற்றது

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததிற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி மேலும் இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின்போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.
“சென்றவாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளை பெற்ற அப்பாக்களும்,அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது. முன்காண் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கு நிச்சயம் வெற்றிபெரும்” என கூறினார்.

இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது.
“இதுவரைக்கும் நா மியூசிக் பண்ண படங்கள் எல்லாத்துக்கும் பின்னணி இசை மட்டுந்தான் பண்ணிருக்கேன். First timeஆ ஜோதி படத்துலதான் பின்னணி இசையோடு சேர்த்து முழு ஆல்பம் பண்ணிருக்கேன். முதலில் பாடலே இல்லாமல்தான் படம் என்னிடம் வந்தது. படத்தை பார்த்தபின் இயக்குனர் மிகவும் உணர்வுபூர்வமாக படத்தை எடுத்திருக்கிறார் என்று எண்ணினேன். அந்த உணர்வை சிலவற்றை பாடல் மூலம் கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து சொன்னேன். தயாரிப்பாளரும் செலவை பொருட்படுத்தாமல் ஒத்துக்கிட்டார். அனைத்து பாடலுக்கும் லைவ் எடுத்தோம், கிளைமேக்ஸ்ல வரும் பாடலை ஜேசுதாஸ்சார் பாடியிருக்கார்.பாடும்போது அவருக்கே கண்கலங்கிவிட்டது, பாடல் ரொம்ப நல்லா இருக்கு, நீண்ட நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் பாடியிருக்கேன்னு சொன்னாரு. அவர் அப்படி சொன்னது எங்களுக்கு வரபிரசாதமாக அமைஞ்சிருக்கு. அந்த பாடலுக்கு tune போடும்போது எனக்கே மனசு ஒருமாதிரி ஆயிடுச்சி.அதன் தாக்கம் அப்படியே இருந்தது, அதுல இருந்து மீண்டு வரதுக்கே ரொம்ப நாளாச்சி” என கூறினார்.

நடிகர் “வெற்றி” கூரியதாவது. “இந்தபடம் 8 தோட்டாக்கள் படத்தின் நீட்சி என்றே சொல்லலாம். காரணம், அந்த படத்துல என் பொருளான துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை கண்டுபிடிக்க தேடி அலைவேன், இந்த படத்துல ஒரு கர்ப்பிணி பெண்ணிடமிருந்து திருடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க தேடி அலைவேன். இந்தபடத்தோட ஸ்கிரிப்ட் கேட்டவுடன் ஸ்கிரிப்ட் நல்லாருக்கு, ஆனா புது teamமா இருக்கு எப்படி பண்ணபோறாங்கனு நெனைச்சேன், சூட்டிங் ஸ்பாட்டுக்குபோய் அவுங்க மேக்கிங் ஸ்டைலை பார்த்ததும் மிரண்டுவிட்டேன். ரொம்ப experience teamன்னு தெரிஞ்சிது. TEAM மேல முழு நம்பிக்கை வந்துடுச்சி. முப்பது நாள் இரவு பகலா ஒரே SCEDULEலில் எடுத்து முடித்துவிட்டனர்.அதுலாம் டீமோட ஆசாத்தியமான விசியம். தயாரிப்பாளர் அனுப்பிய ஆடியன்ஸ் review வீடியோவை பார்த்தேன் .நா நெனைச்ச மாதிரியே படம் நல்லா வந்திருக்கு. இந்த படம் பட்டித்தொட்டியெங்கும் சென்று எனக்கு தாய்மார்களின் அன்பை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்.”என கூறினார்.

பாடலாசிரியர் “கார்த்தி நேத்தா” கூறியதாவது.
“முதன் முதலில் இயக்குனர் என்னிடம் கதையை சொன்னவுடனே நான் மிரண்டுவிட்டேன். அவர் சொன்ன அதே உணர்வில் எனக்கு மெட்டுகளும் வந்ததால் பத்தே நிமிடத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டேன். இந்த படத்துல மூனு பாடலை எழுதியிருக்கிறேன். இந்த “ஆரிராரோ” பாடலில் வரும் அப்பா கதாப்பாத்திரம் போன்றுதான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த பாடலை எழுத கொடுத்த நேரத்தில் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதமாகி இருந்தது.அந்த நேரத்தில் என் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இப்பாட்டின் சூழல் இருந்ததால் என் குழந்தைக்கு எழுதுவதாகவே நினைத்து இப்பாடலை எழுதினேன்.மிகவும் அழகாகவும், ஆழமான வரிகளாகவும் வந்துள்ளது.” என கூறினார்.

தயாரிப்பாளர் “SPராஜாசேதுபதி” கூறியதாவது.
“எனது சொந்த ஊரான கடலூரில் நடந்த உண்மை சம்பவந்தான் இந்த படத்தின் கரு. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தையும், இதன் பின்னணியும் ஆராயும்போது மனசு ரொம்ப பாதிச்சிது. திரைப்படக் கல்லூரியில் படித்த AV கிருஷ்ண பரமாத்மா எமோஷனல் சார்ந்த ஸ்கிரிப்டை சிறப்பாக handle பண்ணுவார், அவரு இயக்கிய குறும்படத்தில் அதை பாத்திருக்கேன். அதனால் இந்த சம்பவத்தை படமாக்க இவர் சரியாக என்று நம்பினேன். DSP சாந்தி அவர்களை சந்தித்து இதை சார்ந்த தரவுகளை ஆராய்ந்து விறுவிறுவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் என்ன விறுவிறுப்பு இருந்ததோ அதே விறுவிறுப்பை கமர்ஷியலாக முழுநீள திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்காண் காட்சியில் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் அப்படியே சென்றடைந்திருக்கிறது. இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நான் படத்தொகுப்பாளராக பணியாற்றிய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கோள் காட்டி ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இதுபோன்று சமூக பிரச்சனை சார்ந்த படங்கள்தான் எடுக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்த எனக்கு பார்வையாளர்கள் இப்படி சொன்னது எனக்கு மனநிறைவளிக்கிறது. “ஜோதி” படம் வரும் ஜூலையில் வெளியாக இருக்கிறது அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையரங்குகளில் பார்த்து எங்களுக்கு பேராதரவு கொடுக்க வேண்டும்” என கூறினார்

 

 

The “Jothi”  team attended a special event on Radio City FM for the second song “Ariro”  release. Police DSP , who was present at the time, lauded the film crew for keeping the mind-boggling real-life incident of child theft in Cuddalore, which is a challenge to the police, and made it into a full-length film and encouraged them to take more pictures of such real-life incidents for social awareness.

Director AV Krishna Paramatma said during the program.
Following the release of the love song “Povathenge” last week, we are now releasing the second song “Ariraro” which is about the relationship between father and daughter. The song is beautifully composed by Harshavardhan Rameshwar, lyrics by Karthik Netta and voice by Balram Charoda. There is no doubt that this song is set to be heard over and over again by fathers who have had children and children who admire dads. The film is a solution to a specific social problem and is very emotional and thriller. Everyone who casts their eyes upon it, wants a go. This has given me great hope and will definitely win. ”

The Hero “Vetri” Said.
“8 Thottakkal is an extension of the film. The reason is that I lost my pistol in that picture and will wander in search of it, this picture will wander in search of the child who was stolen from a pregnant woman. When I heard the script for this film, the script was good, but I remembered how to make a new team, and I was shocked when I went to the shooting spot and saw the making style there. Very experienced team. Full confidence in TEAM. Thirty days and nights ended up being taken in the same SCHEDULE day and night. I saw the audience review video sent by the producer. I hope this film goes everywhere on the menu and earns me the love of mothers. ”

Lyricist “Karthi Netha” said.
“I was shocked when the director first told me the story. I finished writing the song in ten minutes because I got the steps in the same feeling he said. I have written three songs for this film. I was living like the dad character in this “Ariro” song. My baby was two months old when I was given the opportunity to write this song.

Composer “Harshavardhan Rameshwar” said.
“So far I have only done background music for all the films I have made music. First time I did the whole album with the background music of the torch film. At first, the film came to me without a song. After watching the film I thought the director had taken the film very emotionally. I thought it would be great if I could give some of that feeling through the song. The producer also agreed regardless of cost. We took all the songs to live and Jesudassar sang the song that came in the climax. What he said would have been a boon to us. Its impact was the same, it took a long time to recover from that.

Producer “SP Rajasethupathi” said.
“The essence of this film is the real incident that took place in my hometown Cuddalore. The incident at the Government Hospital and the background of the investigation was very emotional. AV Krishna Paramatma, who studied in film college, handles the emotional script well and I deserve it in the short film he directed. So I believed he was right to film this incident. DSP Shanthi met them and started researching the data. The same vibe that was present in this incident is given in the commercial full-length film. The impact of this incident has reached the audience who saw the film in the foreground. They pleaded that more films like this should come out. The first film I worked on as a cinematographer was a case in which a judgment was given in the Chennai High Court citing the film Chess Hunt. So it satisfies me that the audience told me that I was determined to take pictures of such social problems. “Jothi is coming out in July. Everyone should come with their families and see us in the theaters and give us great support,” he said.