Wednesday, October 28
Shadow

ஜோதிக்காவுடன் இணையும் விதார்த்

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா தன் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா மீண்டும் அவர் கணவர் தூண்டுதலில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா மிகவும் தரமான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து வருகிறார் அதோடு மிக பெரிய வெற்றியையும் தேடி க்ல்ல்கிறார் என்று தான் சொல்லணும் அந்த வகையில்மீண்டும் ஒரு மிக சிறந்த கூட்டநோயுடன் இணைகிறார். ஆம் ஹீரோகளில் பத்தோடு பதினொன்றாக இருந்த விதார்த் தன் தவறை உணர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் ஐவரும் இரண்டாவது முறையாக ஜோதிக்கவுடநினைகிறார் .

மொழி’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் ‘தும்ஹாஹி சுலு’ என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் துவங்கவிருக்கிறது.

இதில் ஜோதிகா திருமணமான நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விதார்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்தில் விதார்த் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து இப்போது இரண்டாவது முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார் விதார்த்!