
நடிகர் சுரேஷ் கோபி பிறந்த தினம்
இவரது முழு பெயர் சுரேஷ் கோபிநாதன் நாயர் ஆகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்தவர்.மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் தமிழில், ஐ, தீனா படங்களில் நடித்துள்ளார்.
பாடகி தீக்ஷித வெங்கடேஷன் பிறந்த தினம்
ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இதுமட்டுமின்றி அவரது வளர்ப்பு தந்தையான சந்தோஷ் நாராயண் உருவாகிய ஆல்பத்தில் பாடியுள்ளார். இந்த மூலம் சிறந்த பாடகிக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இதுமட்டுமின்றி சந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்களில் இடம் பெரும் பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் பாடல் இடம் பெற்ற திரைப்படங்கள்
பிட்ஸா 2: வில்லா, குக்கூ, மெட்ராஸ், இருதிசுற்று, இறைவி, குரு, மேயாத மான், காலா
நடிகை சவுமியா பிறந்த தினம்
இவர் நடிகை கவுதமியின் மருமகளும் மற்றும் இந்திய சிந்தையாளர் யு.கே. கிருஷ்ண மூரத்தியின் பேத்தியாவர். ஆந்திராவில் பிறந்த இவர் முதலில் தழுங்கு படங்களில் நடித்தார்.
தமிழில் முதன்முதலாக தோழா படத்தில் நடித்தார். பின்னர் சென்னை 600028 மற்றும் நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் கபூர் பிறந்த தினம்

இவர் தயாரிப்பாளர் போனி கபூர் வின் மகன். இவர் 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கராக அறிமுகமானார். அதை தொடர்ந்து Aurangzeb, Gunday போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடித்த 2 ஸ்டேட்ஸ் என்ற திரைப்படம் 18ம் திகதி ஏப்ரல் மாதம் 2014ல், வெளியானது. இவர் தற்பொழுது Tevar என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருகின்றார்.
இவர் 2003ம் ஆண்டு Kal Ho Naa Ho என்ற திரைப்படத்திலும் மற்றும் 2009ம் ஆண்டு Salaam-E-Ishq என்ற திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2005ம் No Entry ஆண்டு என்ற திரைப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தார்.
