
வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தது. வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.
இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த படம் வரும் மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியாகி, யூ/ஏ சான்றிதழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.