Thursday, November 13
Shadow

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் மற்றும் ஆர்யா இணையும் “காப்பான்”

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இடையே செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார்.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 70% முடிந்துள்ள இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அதில் ‘மீட்பான்’, ‘காப்பான்’, ‘உயிர்கா’ ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன.

காப்பான் தலைப்புக்கே பலரும் ஆதரவு தெரிவித்ததால், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.#kappon #kvanand #suriya #mohanlal #arya #harrysjayaraj #lyca