
தமிழ் சினிமாவின் புரட்சிக்காரன் என்றால் அது விஜய் ஆண்டனி தான் பொதுவாக தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு செண்டிமெண்ட் இருக்கு அதை உடைத்தவர் என்றால் அது விஜய் ஆண்டனி ஆமாங்க நெகட்டிவான டைட்டில் வைக்கமாட்டங்க அனால் இவர் துணிந்து வைப்பார் அதோடு சிறந்த கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் அதன் படி மிக சிறந்த வெற்றிகளை தட்டி சென்றவர் அதோடு இன்று சூர்யா கார்த்தி போல தெலுங்கு மார்கெட்டில் மிக பெரிய ஒரு வர்த்தக ஹீரோ என்று பெயர் வாங்கியவர். இவரின் நடிப்பில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் காளி படத்தின் பிரஸ் நீட் நேற்று நடந்தது.

காளி படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் விஜய் ஆண்டனி நாயகி சுனைனா மற்றும் மேலும் இரண்டு நாயகி அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் புதுமுகங்களாக அறிமுகம் ஆகும் நாயகிகள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் இயக்குனர் கிருத்திகா உதயநிதி கலந்துகொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் ஒரு பாடல் மற்றும் படத்தின் ஆரம்பம் பதினைந்து நிமிட காட்சிகள் திரையிட்டனர்.விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் சொல்லவா வேண்டும் செம இதில் மிக பெரிய விஷயம் என்னவென்றால் படத்தின் ஆரம்பம் பதினைந்து நிமிட காட்சிகள் தான் சிறப்பு படம் எப்போது வெளியாகும் எப்போது பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு விறுவிறுப்பு இருந்தது.
கிருத்திகா உதயநிதி இயக்கமா என்று வியச்க்கும் அளவுக்கு அந்த காட்சிகள் இருந்தது மிக கைதேர்ந்த ஒரு இயக்குனர் படம் போல இருந்தது அப்படியான ஒரு படம் மீண்டும் அம்மா செண்டிமெண்ட் முதல் முறையாக கிராமம் சார்ந்த ஒரு கதைகளத்துடன் களம் இறங்குகிறார் விஜய் ஆண்டனி
படத்தின் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் பேசும் போது எனக்கு டெஸ்ட் வைத்து தான் இந்த படத்தின் வாய்ப்பை கொடுத்தார் விஜய் ஆண்டனி இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியுள்ளதாக கூறினார் அதே போல படத்தின் இயக்குனருக்கும் டெஸ்ட் வைத்து தான் வாய்ப்பு கொடுத்தாராம் விஜய் ஆண்டனி அதை அவரே கூறினார் இந்த விஷயம் படம் முடிந்த உடன் தான் விஜய் ஆண்டனி கூறினாராம்.
என்ன டெஸ்ட் தெரியுமா இயக்குனர் கிருத்திகா காளி படத்தின் கதை தயார் செய்துவிட்டு தொடர்பு கொண்டபோது கதை சொல்ல நான் வருகிறேன் என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி கூறியபோது இல்லை நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது ஒன்றும் புரியாமல் என்னடா ஒரு ஹீரோ நம் வீட்டுக்கே வந்து கதை கேட்கிறேன் என்று சொன்னதும் வியந்தாராம் அப்புறம் தான் தெரிந்துள்ளது அது ஒரு டெஸ்ட் என்று கதை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வீட்டில் வைத்தே பிடிக்கவில்லை என்று சொல்லி விடலாம் என்று தான் நானே வந்தேன் என்று கூறினாராம்
பின்னர் விஜய் ஆண்டனி பேசும் போது எனக்கு மிக சிறந்த ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் அவரிடம் இன்னும் ஒருகதை அதுவும் மிக சிரந்தை கதை இருக்கிறது அதை யாரும் நழுவ விட்டு விடாதீர்கள் என்று கூறினார் அதோடு படகுழுவில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் விஜய் ஆண்டனி
