Sunday, July 3
Shadow

கபளிஹரம் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு

கபளிஹரம் திரைப்படத்தின் வெற்றி விழாவை உதயம் திரையரங்கில் படக்குழுவினர் கொண்டாடினர் மகிழ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக நாயகன் தக்சன் விஜய் நடித்துயிருக்கும் திரைப்படம் ‘ நாட்டிற்கு, மக்களுக்கு போலீஸ் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம்தான் கபளீகரம்

உண்மையான ஒரு திருட்டுச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் இது. வேறு மாநிலத்திலிருந்து திருடர்கள் தமிழகத்திற்கு வந்து, திருடிவிட்டுச் செல்கிறார்கள். அதனைத் தமிழக போலீசார் திறமையுடன் துப்பறிந்து அவர்களைக் கைது செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதனைத் தழுவி ‘கபளிஹரம்’ திரைப்படம் 5-வது நாளாக ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிற காரணத்தால் தக்சன் விஜய் கபளிஹரம் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்