Thursday, June 13
Shadow

அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பளர்களை டார்ச்சர் செய்யும் காஜல் அகர்வால்

வேதாளம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் 57வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்துக்காக உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி இருக்கிறார் அஜீத். அவரது தோற்றத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் டைட்டில் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது விவேகம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கும் காஜல் அகர்வால் இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 61வது படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.

இளம் மற்றும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கும் காஜல் உள்ளிட்ட ஹீரோயின்கள் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவி தெலுங்கில் நடித்த கைதி நம்பர் 150 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இளவட்ட ஹீரோயின்களிடம் கேட்டபோது நழுவிச் சென்றனர். காஜலிடம் கால்ஷீட் கேட்டபோது வழக்கமான சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் கேட்டார். அதன்படி அவருக்கு சம்பளம் தரப்பட்டது. இப்படம் வெளியாகி ஹிட்டானது.

ஏற்கனவே ஒன்றேகால் கோடி சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த காஜல், சிரஞ்சீவி படத்துக்காக ஒன்றேமுக்கால் கோடி பெற்றாராம். ஏற்றிய சம்பளத்தை குறைக்காமல் தற்போது அதே சம்பளத்தை மற்ற படங்களுக்கும் கேட்டு வருகிறார். விரைவில் தொடங்கவுள்ள சீனியர் நடிகர் படமொன்றில் நடிக்க காஜலிடம் தயாரிப்பாளர் கால்ஷீட் கேட்டு அணுகியபோது சிரஞ்சீவி படத்துக்கு தான் வாங்கிய அதே சம்பளம் தந்தால் கால்ஷீட் தருகிறேன் என்றாராம். அதைக்கேட்டு ஷாக் ஆன தயாரிப்பாளர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி
விட்டாராம்.

Leave a Reply