
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பளர் முக்கிய தயாரிப்பாளர் பிரமாண்ட தயாரிப்பாளர் பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்றால் அது கலை தாயின் தவப்புதல்வன் கலைபுலி தாணு என்று சொன்னால் மிகையாகது. ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் பத்தை கொடுத்தவர். கமலஹாசனை ஆளவந்தான் ஆகா அழகு பார்த்தவர் விஜய்க்கு கத்தியும் துப்பாக்கியும் கொடுத்தவர் அஜித்தை முதலில் கண்டுகொண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று சொன்ன தயாரிப்பளர் தான் இவர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் வினியோகிஸ்தர் சங்க தலைவர் என்று முக்கிய பதவிகளில் பதவி வகித்தவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக தயாரிப்பு மற்றும் வினியோகிஸ்தர் துறையில் கொடிகட்டி பறப்பவர் தமிழ் சினிமாவின் பிரமாண்டம் என்றால் தாணு என்று சொல்லும் அளவுக்கு திகழ்பவர். கொடுப்பதில் கர்ணனாகவும் அணைப்பதில் கண்ணாகவும் இருப்பவர் அவருக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறது தமிழ் திரையுலகம்
திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு இன்று (25.06.2019) பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு தமிழ் திரையுலகமே நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது.
கலைப்புலி தாணுவுக்கு இன்று நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ்.
நாக் ஸ்டுடியோ நிர்வாகி கல்யாணமும் கலைப்புலி தாணுவுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.
