
ஏப்ரல் 3-ல் ‘காளிதாஸ் 2’ வேட்டை ஆரம்பம் – மிரட்டலான போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
2019-ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ தயாராகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ள நிலையில், மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். மேலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை சங்கீதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் திரை உலகிற்கு வருகிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் குடும்ப பின்னணியுடன் கூடிய புலனாய்வு திரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், ‘காளிதாஸ் 2’ திரைப்படமும் உணர்ச்சிகளும் அதிரடியும் கலந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் நடிகர்களின் மிரட்டலான தோற்றம், படம் ஒரு தீவிரமான திரில்லர் அனுபவத்தை வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, புரொடக்ஷன் டிசைனராக ஜி. துரைராஜ் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனிக்க, படத்தொகுப்பை புவன் ஸ்ரீனிவாசன் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை ஸ்கை பிக்சர்ஸ் (Sky Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களின் வெளியீட்டில் முன்பு ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வந்திருந்ததால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கோடை விடுமுறை ஆரம்ப காலத்தில் வெளியாகும் இந்த ‘காளிதாஸ் 2’, திரில்லர் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான சினிமா அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Kalidas 2’ Release Date Announced with a Powerful Poster – The Hunt Begins on April 3!
The 2019 film ‘Kalidas’ became a major success both critically and commercially with its gripping screenplay and unexpected climax. Following the success of the first installment, the sequel ‘Kalidas 2’ has now been completed and has created huge anticipation among fans. The makers have officially announced that the film will release in theatres on April 3.
Director Sri Senthil, who made a strong mark by directing the first part, has also helmed this sequel. Bharath plays the lead role in the film, while Ajay Karthi appears in another important character. Actress Sangeetha, who became popular through ‘Poove Unakkaga’, is making her comeback after a long gap with a significant role in this film. Bhavani Sre and Aparnathi are also part of the cast in key roles.
The first part surprised audiences as a family-centered investigative thriller. Continuing in the same vein, ‘Kalidas 2’ is said to be an emotional yet intense action-packed thriller. The recently released poster featuring the striking looks of the actors has further heightened expectations, suggesting a gripping thriller experience for the audience.
The film’s music is composed by Sam C. S., while G. Durairaj has handled the production design. Suresh Bala is the cinematographer and Bhuvan Srinivasan is in charge of editing.
The film is produced under the banner of Sky Pictures by producer and distributor Five Star K. Senthil along with Dr. N. Yogeswaran. Since their previous releases such as ‘Parking’, ‘Garudan’, and ‘Maharaja’ were successful, there is considerable buzz and expectation in the industry and among audiences for ‘Kalidas 2’ as well.
With all production work completed, ‘Kalidas 2’ is set to hit theatres at the beginning of the summer holiday season and is expected to offer an exciting treat for thriller lovers.
