Monday, June 8
Shadow

பெண் உரிமையை பேசும் புதிய முயற்சி – சத்யசிவா இயக்கத்தில் விஜய்குமார்–ஆனந்தி இணையும் “அறிவு” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

பெண் உரிமையை பேசும் புதிய முயற்சி – சத்யசிவா இயக்கத்தில் விஜய்குமார்–ஆனந்தி இணையும் “அறிவு” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட கதைகளுக்கு தனி அடையாளம் அமைத்து வரும் இயக்குநர் சத்யசிவா, தனது புதிய திரைப்படமான “அறிவு” மூலம் மீண்டும் வலுவான கருத்தை முன்வைக்க தயாராகியுள்ளார். Movietron Production நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது.

Movietron Production சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இந்த படம், அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகிறது. தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற உறியடி விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெண் உரிமைகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்ற கருத்துகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்த திரைக்கதையால் இந்த படம் பொதுமக்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் முன்னாள் கால்பந்து வீரரும் நடிகருமான I.M. விஜயன், நடிகர் சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும் திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, சமூகப் பிரச்சினைகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் இயக்குநராக அறியப்படுகிறார்.

படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K. பணியாற்ற, கிரியேட்டிவ் ஹெடாக ராமு M. இணைந்துள்ளார். இணை தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இயற்கை சூழலும் நகர வாழ்க்கையின் நிஜங்களும் ஒன்றிணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமூகப் பொறுப்புணர்வும் விறுவிறுப்பும் கலந்த திரைப்படமாக உருவாகும் “அறிவு” குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 


“Arivu” Begins with a Pooja – Director Sathyasiva’s New Film on Women’s Rights Starring Vijay Kumar and Anandhi

Director Sathyasiva, known for presenting socially relevant themes in Tamil cinema, has started work on his new film “Arivu.” The movie, produced by Movietron Production, officially commenced with a simple pooja ceremony today.

The film is produced by Saivinoth Jayakumar under the banner of Movietron Production and marks the company’s maiden production venture. Actor Vijay Kumar, who gained recognition for his distinctive performance in Uriyadi, and actress Anandhi, popularly known for Kayal, play the lead roles in the film.

“Arivu” is said to revolve around strong social themes, particularly focusing on women’s rights. According to the team, the film will combine an engaging narrative with a meaningful social message that reflects contemporary realities.

The cast also includes former footballer-turned-actor I. M. Vijayan, Singampuli, and Deepa Shankar, who will appear in important roles. Director Sathyasiva, who has written the story and screenplay, is known for presenting powerful social issues through a gripping cinematic style.

The film’s music is composed by D. Imman. Cinematography is handled by Thil Raj, while editing is by Vetri Krishnan. S.K. serves as the art director and Ramu M. is the creative head. Sai Prabhu Jayakumar is the co-producer of the project.

The shooting of the film is planned to take place in Idukki, Theni, and Chennai, blending scenic natural landscapes with the realities of urban life.