Friday, December 6
Shadow

கல்கி 2898 AD@டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின்..!

கல்கி 2898 AD@டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின்..!

மும்பையில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் ‘டெக்ஃபெஸ்ட்’ ( Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் ‘கல்கி 2898 AD’ படத்தின் இயக்குநரான நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, திரையுலகில் ‘டார்லிங்’ என அன்புடன் அழைக்கப்படும் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். பிரபாஸின் குரலை தொலைபேசி மூலம் கேட்டபோது, அங்கு கூடி இருந்த மாணவர்கள் உற்சாகமாய் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸை மாணவர்களிடம் உரையாட வைத்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது கலந்துரையாடல் நிகழ்வு, உற்சாகத்தின் உச்சத்தை எட்டியது.

எதிர்பாராத இந்த பரபரப்பான தொலைபேசி அழைப்பை விட, ‘டெக் ஃபர்ஸ்ட்’ விழா சிறப்பாக நடைபெறுவதற்கு வேறு சில அம்சங்களும் இதன் போது இடம்பெற்றது. இயக்குநர் நாக் அஸ்வின் மாணவர்களுடன் உரையாடி, ‘கல்கி 2898 ‌AD’ படத்தில் இடம்பெற்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் அந்த படைப்பை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சிக்கலான செயல்முறை குறித்தும், அதனை விளக்கும் வகையிலான வசீகர வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

‘கல்கி 2898 AD’ வைஜெயந்தி மூவிஸின் வித்தியாசமான சினிமா முயற்சியாகும். இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம்… அதன் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை செய்யவுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ‘காமிக்-கான்’-ல் திரையிடப்பட்டப் போது.. அற்புதமான வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இந்த அற்புதமான சினிமா அனுபவத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அற்புதமான காட்சி மற்றும் கதை சொல்லும் பாணியை விவரிக்கிறது. ‘கல்கி 2898 AD’ ஒரு குறிப்பிடத்தக்க சினிமா பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அதிநவீன தொழில்நுட்பம்… அதன் நட்சத்திர நடிகர்களின் கடின உழைப்புடன் இணைந்திருப்பதால், இது திரை ஆர்வலர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாகக் காண வேண்டிய படைப்பாக இருக்கும்.

Kalki 2898 AD @ Tech Fest: Nag Ashwin surprises fans by calling Prabhas while on stage

In a spectacular turn of events at Techfest, Asia’s Largest Science and Technology Festival, director Nag Ashwin of Kalki 2898 AD surprised fans by calling none other than the darling Prabhas. The atmosphere was electric as one enthusiastic student urged Ashwin to call with Prabhas, affectionately known as the ‘darling’ of the film industry. Without hesitation, the director obliged, and when Prabhas answered the call, it marked a delightful interaction with his fans.

Techfest witnessed more than just this thrilling phone call. Nag Ashwin, in the midst of engaging with students, took the opportunity to unveil a captivating video showcasing the intricate process behind the creation of weapons featured in the film.

Kalki 2898 AD, a cinematic venture by Vyjayanthi Movies, boasts an impressive ensemble cast, including iconic figures such as Prabhas, Amitabh Bachchan, Kamal Haasan, and Deepika Padukone. The film, already a topic of immense anticipation, is set to redefine cinematic boundaries with its state-of-the-art technological innovations.

Scheduled for release in 2024, fans are eagerly awaiting this cinematic marvel after getting a tantalizing glimpse at Comic-Con, where the film teased groundbreaking visual and narrative elements. Kalki 2898 AD promises to be a remarkable cinematic journey, blending cutting-edge technology with the stellar performances of its cast, making it a must-watch for enthusiasts and cinephiles alike.