

உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பாக்கவைத்தவர் என்றால் அது கமல்ஹாசன் தான் என்பதில் எந்த வித மாற்று கருத்து இல்லை அதிலும் 1986 ம் ஆண்டு வெளியான விக்ரம் தமிழ் திரைப்படம் உலக சினிமாவுக்கு சவால் விட்ட படம் அந்த காலத்திலே மிக துல்லிய தொழில்நுட்பத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் அந்த காலத்து ஜேம்ஸ்பாண்ட் படத்தை போல உணரவைத்த ஒரு படம் தான் விக்ரம் இந்த படத்தை 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கிறார் கமல்ஹாசன் .
இதற்க்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம் தற்காலத்துக்கு ஏற்ப ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு கதையை சொல்ல கமல் அவர்களுக்கு படத்தின் கருவும் கதை ஓட்டமும் முற்றிலும் வித்தியாசமாக இருக்க உடனே சம்மதம் சொன்னார் இதற்கிடையில் படத்தின் வேலைகளை முழு மூக்காக லோகேஷ் கனகராஜ் கவனித்து வந்தார். இது ஒருபாகம் இருக்க ரசிகர்கள் இந்தப்படத்தின் படபிடிப்பு எப்போ தொடரும் படம் எப்போ வெளியாகும் என்ற ஆவல் ஏற்பட்டது அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் அளவுக்கு இந்த படத்தின் பிரி புரொடக்ஷன் வேலைகளை முடித்து படப்பிக்கு தயாராகியுள்ளது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
கதை, திரைக்கதை, இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
வசனம் – ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்
ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்
இசை – அனிருத்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் – N.சதீஸ் குமார்
சண்டை பயிற்சியாளர் – அன்பறிவு
நிர்வாக தயாரிப்பாளர் – S. டிஸ்னி
தயாரிப்பாளர் – கமல் ஹாசன் & R.மகேந்திரன்
