Thursday, April 30
Shadow

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணே கலைமானே படத்தின் ட்ரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி

தர்மதுரை’ படத்தை அடுத்து இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான ‘எந்தன் கண்களை காணோம்’ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.