

தமிழ் சினிமாவில் கோடியில் ஒருவன் என்றால் அது விஜய் ஆண்டனி என்று சொல்லலாம் காரணம் தமிழ் சினிமாவில் இருக்கும் முட சென்டிமென்ட்டை உடைத்த இருவர் டைட்டல் முதல் எல்லாத்துக்கும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் முதலில் தன முதல் படம் முதல் இப்போது வரை டைட்டலில் முழு வித்தியாசத்தை காண்பித்தவர். அதிலில் வெற்றியும் கண்டவர் இவர்
தமிழ் சினிமாவில் பலவித அவதாரங்கள் எடுத்தவர் இவர் என்று சொன்னால் மிகையாகது ஆம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் பாடலாசியர் பாடகர் பின்னர் ஹீரோ அடித்து தயாரிப்பாளர் பின்னர் எடிட்டர் என்று விஸ்வரூபம் எடுத்தவர் இவர் இதில் எல்லா துறைகளிலும் வெற்றியும் கண்டவர்.
தற்போது இவர் நடித்து வரும் படம் கோடியில் ஒருவன் இந்த படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். ஆனந்த் செல்வன் ஏற்கனவே தமிழில் ஆள் மற்றும் மெட்ரோ படங்களை இயக்கியவர் இந்த இரண்டு படங்களும் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு படம் அதோடு மிக சிறந்த விமர்சனத்தையும் பெற்ற படம்.
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க ,ஒளிப்பதிவினை N S உதயகுமார் மேற்கொள்கிறார் .
இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியவை :
கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மீகா கூறியவை :
இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும் ,தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இவர் ஒரு ரியல் லைஃப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
படத்தை பற்றி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறியவை :
கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்த படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் , சிக்கலைகளையும் மற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம். படத்தின் நாயகன் மட்டும் இல்லை இந்த படத்தின் எடிட்டரும் விஜய் ஆண்டனி தான் நடித்து கொண்டு இருக்கும் போதே இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளையும் கவனித்து கொண்டார் விஜய் ஆண்டனி நிச்சயம் இந்த படம் அவரின் மேலும் ஒரு பரிமாணத்தை கொடுக்கும் ரசிகர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் நமக்கு தெரியாமலே நம்மை பலவித அரசியல் நடக்கிறது இதை மையமாக வைத்து தான் இந்த படத்தின் கதை களம் உருவாகியுள்ளது.
Dr . தனஞ்செயன் கூறியவை :
கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர் .இந்த படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது . இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார் .முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார் படத்தின் முதல் பாதியை அருமையாக வந்துள்ளது இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி . படப்பிடிப்பு நடகக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் , இப்படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா ,லலிதா தனஞ்செயன் ,B பிரதீப் , பன்காஜ் போஹ்ரா , விக்ரம் குமார்
