தமிழ் சினிமாவில் எப்போதும் எதாவது ஒரு சீசன் இருந்து கொண்டே இருக்கும் கொஞ்ச நாட்களுக்கு முன் அதாவது 80 களில் நடப்பது போல கதைகள் சீசனாக இருந்தது பின்னர் பேய் சீசனாக மாறியது அந்த பேய் சீசன் தான் நீண்ட நாட்களாக தொடர்ந்தது இன்னும் தொடர்கிறது ஆனால் இப்ப ஒரு சின்ன மாற்றம் முன்னணி ஹீரோகள் மட்டும் 80 களின் சீசனுக்கு செல்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் வெளியான சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் 80களின் காலகட்ட சம்பவங்களை கொண்டு அமைக்கப்பட்டு வெற்றிபெற்றது. இதையடுத்து வெளியான வேறு சில படங்களும் 80களின் காலகட்டத்தை சுற்றியே அமைக்கப்பட்டது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படம் 80களின் காலகட்டத்தை பின்னணியாக கொண்டு ஒரு பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் 80களின் காலகட்ட விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
சூர்யாவும் 80களின் காலகட்ட கதையான, ‘தானா சேந்த கூட்டம்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த 2 படங்களுக்காகவும் செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேபாணியில் 80களின் காலகட்ட படமாக சிம்பு நடிக்கும் அஞ்சாதவன் அசராதவன் அடங்காதவன் படமும் உருவாகிறது