Wednesday, October 28
Shadow

நடிகர் எஸ். வி. ரங்கராவ் பிறந்த தினம்

ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள். 1950களில், 1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்.

தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விஸ்வநாத சக்ரவர்த்தி ‘ என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.

அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.

Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து.
‘நானும் ஒரு பெண் ‘மாமனார் -மருமகள் உறவு.விஜயகுமாரியின் மாமனாராக.
‘கற்பகம் ‘ ஜெமினி கணேஷின் மாமனாராக.
‘அப்பா ‘ ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
‘கண் கண்ட தெய்வம் ‘ படத்தில் சுப்பையாவின் ‘அண்ணன் ‘ ரோல்!
அவர் செய்த புராண பாத்திரங்கள்.

வில்லனாக ‘நம் நாடு ‘ படத்தில் ‘பக்த பிரகலாதா’வில்
‘மாயா பஜாரில் ‘ கடோத்கஜனாக “கல்யாண சமையல் சாதம் !”
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!