Wednesday, October 28
Shadow

எழுத்தாளர் அனுராதா ரமணன் பிறந்த தினம் இவரை பட்ரிய சில வரிகள்

தஞ்சாவூரில் பிறந்த இவர் பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது. இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது. மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.

கடந்த மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது வயதில் இவர் மரணமடைந்தார்.

இவர் கதை எழுதிய திரைப்படங்கள்

சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல்

இவர் கதை எழுதிய தொலைக்காட்சி தொடர்கள்

பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள்